முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அனைவருக்கும் சற்று தடுமாற்றமாகவும், பயமாகவும் தான் இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு பெண்களை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். இங்கே நீங்கள் முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன்னால் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆணுறையை மறக்க வேண்டாம்
உடலுறவு கொள்வதற்கு முன்னால் நீங்கள் கட்டாயமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு. நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகுமானால், ஆணுறையை வைத்திருப்பது அவசியம். சிலர் உடலுறவு வைத்துக்கொள்ளும் சூழ்நிலையின் போது ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு தேவையற்ற கர்ப்பம் மற்றும் நோய் தொற்றுக்களுக்கு ஆளாகின்றனர்.
அந்த நேரத்தை அனுபவியுங்கள்
உடலுறவில் சிலர் ஈகோ பார்ப்பது உண்டு. ஆண்கள் பெண்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு இருப்பார்கள். படபடப்பாக இருப்பதை நிறுத்துங்கள். நீங்கள் படங்களில் பார்த்தது மற்றும் வீடியோக்களில் பார்த்தது என அனைத்தையும் மறந்து விடுங்கள் ஏனென்றால் அவை நிஜம் அல்ல. அந்த பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பதை மட்டுமே மனதில் வையுங்கள்.
உடலுறவுக்கு முன்..
உடலுறவுக்கு முன்பான விளையாட்டுகளில் ஆண்கள் பெரும்பாலும் ஈடுபடுவது இல்லை என்பது பெரும்பாலான பெண்களின் குற்றச்சாட்டாகும். உடலுறவுக்கு முன்பான விளையாட்டுகளை பெண்கள் விரும்புகிறார்கள் என்றால் அது உடலுறவை விட அவர்களுக்கு அதிக சந்தோஷம் தருகிறது என்று அர்த்தம்.
வலி உண்டாகலாம்
முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்ளும் போது ஆண் உறுப்பு மற்றும் பெண்ணுறுப்பில் வலி உண்டாகலாம். இது பெரும்பாலும் அனைவருக்கும் உண்டாகும் ஒரு நிகழ்வு தான்.
கன்னித்தன்மை
பெண்களின் கன்னித்தன்மையை கணிக்க நிறைய கணக்குகளை ஆண்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். முதல் முறை உடலுறவு கொள்ளும் போது பெண்களுக்கு இரத்தம் வெளியிறும் என்பது உண்மை தான். அவ்வாறு வெளியேறவில்லை என்றால் அந்த பெண்ணின் கன்னித்தன்மையில் சந்தேகம் கொள்ளக்கூடாது. அது கடுமையான உடற்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதலினால் உடைந்திருக்கக் கூடும்.
உடலுறவை பற்றி பேசுதல்
திருமணமான நிறைய ஜோடிகள் உடலுறவை பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் உடலுறவில் ஈடுபடுகின்றனர். இது தவறானது. உங்களது துணையிடம் உடலுறவு பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிய வேண்டியது அவசியம். உங்கள் துணையின் தேவையை அறிந்த பின்னர் உடலுறவு கொள்வது சிறந்த பலன்களை முதல் முறையிலேயே தரும்.
விந்து வெளியேறுதல் பிரச்சனை
உடலுறவு வைத்துக்கொள்ளும் போது இரண்டு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. சீக்கிரமாக விந்து வெளியேறுதல் மற்றும் விந்து வெளியேறாமலேயே இருப்பது. முதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் போது பதற்றம் மற்றும் பயம் காரணமாக இவை நடக்கலாம். இதனால் பயம் கொள்ள தேவையில்லை. இது தானாக சரியாகிவிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால், மருத்துவரை நாடுவது சிறந்தது.
பெண் திருப்தியடையவில்லையா?
பெண் திருப்தியடைவதற்கு முன்பாக உங்களுக்கு விந்தணு வெளியேறிவிட்டால் கவலை வேண்டாம். ஆணுறுப்பு மட்டுமே ஆணுக்கான உடலுறவு சாதனம் கிடையாது. சில விதமான தீண்டல்கள் மூலமாகவும் பெண்ணை திருப்தியடைய செய்யலாம்.
நினைவில் கொள்ளுங்கள்
முதல் முறை உடலுறவு கொள்ளும் போதே மிக சிறப்பாக செயல்பட முடியாது. உடலுறவில் அனுபவத்தால் மட்டுமே முழுமையான இன்பம் காண முடியும்.