பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கை குறித்து எழுதி சென்ற சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம்.
ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.
நாடி ஜோதிடம் குறித்து, அறிவியல் முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சில உண்மை ரகசியங்களை பற்றி பார்ப்போம்…
நாடி ஜோதிடம் குறித்த உண்மை ரகசியங்கள்
2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும் போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழே இருந்த போது, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நாடி ஓலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த காலத்தில், சுவடிகளில் இருந்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் எதிர்கால குறிப்புகள் பற்றி அறிந்து, அதில் பல சுவடிகளை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்று விட்டனர். மீதமுள்ள சில சுவடிகளை செல்வந்தர்கள் வீட்டில் பதுக்கி கொண்டனர்.
நாடி ஜோதிடர்களில் சிலர் மட்டுமே ஆன்மாவின் எதிர்காலம் குறித்த உண்மை தகவல்களை அச்சுவடியில் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்பட்டு இருக்கும்.
அகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும், இந்த ஏடுகள் 12 காண்டங்களும், 4 தனிக் காண்டங்கள் பற்றியும் கூறுகிறது.
சுவடியில் உள்ள காண்டங்கள் எதைக் குறிக்கிறது?
முதல் காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.
இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.
மூன்றாம் காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.
நான்காவது காண்டம் – தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மறும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.
ஐந்தாம் காண்டம் – பிள்ளைகள் பற்றி கூறுகிறது.
ஆறாம் காண்டம் – வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.
ஏழாம் காண்டம் – திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.
எட்டாம் காண்டம் – உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.
ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.
பத்தாவது காண்டம் தொழில் பற்றி கூறுகிறது.
பதினோராம் காண்டம் – லாபங்கள் பற்றி கூறுகிறது.
பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.
தனி காண்டம் கூறுவது என்ன?
சாந்தி காண்டம் – வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.
தீட்சை காண்டம் – மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.
ஔஷத காண்டம் – மருத்துவம் பற்றி கூறுகிறது.
திசாபுத்தி காண்டம் – வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.