நாக்கில் இந்த சுவையை உணர்ந்தால் ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

0
1023

நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்கத் தக்கவாறு சமநிலைப் படுத்தவும் உதவும் ஓர் முக்கிய உறுப்பு நாக்கு. இது, பொதுவாக நாம் அறிந்த விஷயம்தான். ஆனால், நாக்கைப் பற்றி நாம் அறியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது.

அதாவது காய்ச்சல், அல்லது உடல் நலம் சரியில்லாத போது நமது நாக்கு.உலோகச் சுவை, மற்றும் இரும்புச்சுவை போன்ற சுவை உணர்வுகளை உணரக்கூடும்.

அவை ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது நாம் சாப்பிட்ட உணவுகளின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான் வைத்தியா் முதலில் நாக்கினை பாிசோதிக்கின்றாா்.

இரும்புச் சுவையை உணர்வது ஏன்?

பாராசிட்டமால், அன்டிபயாடிக் மற்றும் சிறுநீரக பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் சில மாத்திரைகளால் உலோகச் சுவை வரும். அப்படி வந்தால் உடனே வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

பற்கள் மற்றும் ஈறுகளின் ஏற்படும் மோசமாக பாதிப்புகள் காரணமாக இந்த மாதிரியான சுவையை உணரக் கூடும்.

முதல் மூன்று மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாதிரியான உலோசக் சுவை உண்டாகும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே. பின்பு சாியாகி விடும்.

உடலில் செம்பு மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது ஜிங்க் சத்து குறைபாடு இருந்தாலோ இவ்வாறான உலோகச் சுவை உண்டாகும்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது, கட்டுப்படுத்தும் திறன் கொண்ட மூளை, சுவை உணர்ச்சியை தாக்கும். இதனால் உலோகச் சுவையை உணரக்கூடும்.

நச்சுத்தன்மை வாய்ந்த வார்னிஷ், கோபால்ட், காரியம் போன்றவை நம் உடலுக்குள் நுழைந்தால் அது உங்கள் நாக்கில் உலோகச் சுவையை ஏற்படுத்தும்.

சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறினால், அது வயிற்று உபாதைகள் மற்றும் நாக்கிலும் உலோகச் சுவையை உண்டாகும்.

சுவாசக் குழாய் கோளாறுகள், சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் உலோகச் சுவை அதிகரிக்கும்.

ரேடியோ தெரபி , கீமோ தெரபி ஆகிய சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு, தலையில் அடிப்பட்டவர்களுக்கும் உலோகச் சுவை உண்டாகும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், அதிகப்படியான யூரிக் அமிலம் ரத்தத்தில் கலக்கும். அதனால் வாய் துர்நாற்றம், உலோகச் சுவை, பசியின்மை போன்றவை உண்டாகும்.

உடலில் ஹைபோகிளசிமிக் எனப்படும் குறைந்த அளவு குளுகோஸ் உற்பத்தியினால் நாக்கில் உலோகச் சுவை ஏற்படும்.

விட்டமின் D சத்து நம் உடலில் அதிகமாகவும், போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தாலும் உலோகச் சுவை ஏற்படும்.

தடுப்பது எப்படி?

பல் தொடர்பான பிரச்சனையால் உலோகச் சுவையை உணர்ந்தால், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து கொப்பளிக்க வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் எச்சில் சுரப்பு அதிகமாக தூண்டப்பட்டு உலோகச் சுவை தடுக்கப்படும்.

பழச்சாறுகள், தண்ணீர் போன்ற நீர்ச்சத்து மிக்க பானங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதினா, ஆரஞ்சு சுவையுள்ள இனிப்பு மிட்டாய்கள், ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.அதை விட மருத்துவாிடம் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: