நயன்தாரா வெளியிட்ட காதலர் தின புகைப்படத்தால் குழப்பம்!

0
734

நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந் தெடுத்து நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், காதலர் தினம் கடந்ததை அடுத்து இன்று விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் நயன்தாரா.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலர் நல்ல கமன்டுகளை தெரிவித்தாலும், இன்றும் சிலர் காதலர் தினம் தாமதமாகியுள்ளதாக குழப்புவது போல சுவாரஸ்யமாக கமன்ட் செய்துள்ளனர்.

காதலர் தினம் நேற்று காதலர் தினத்தை உலக மக்கள் பலரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.

இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் ஸ்பெஷல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.

ஸ்பெஷல் புகைப்படம் இந்த புகைப்படத்தில் நயன்தாரா ‘N’ எனக் குறிப்பிடப்பட்ட உடையையும், விக்னேஷ் சிவன் ‘V’ எனக் குறிப்பிடட்ட உடையையும் அணிந்து நெருக்கமாக நிற்கிறார்கள்.

‘VikkiNayan’ எனக் குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்டிருக்கும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம ஜோடி இன்றுதான் நயனுக்கும் விக்கிக்கும் காதலர் தினமாம். ரசிகர்கள் பலர் இந்த அசத்தலான ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்கள். ஒரு சிலர் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சோக ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

இன்னும் சிலர் காதலர் தினத்தை தாமதமாக கொண்டாடியுள்ளதால் குழப்பத்தில் கமன் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: