உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முடக்கு வாதம், சோரியாஸிஸ், கரப்பான், மற்றும் பா.ல்.வினை நோய்களுக்கு மருந்தாகும் வேர் !

0
1444

நன்னாரி சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும்.

உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும் குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும். கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது.

`சப்போனின்’ என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியாஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது. கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்:

 1. நன்னாரி – 200 கிராம்
 2. சுக்கு – 50 கிராம்
 3. ஏலக்காய் – 25 கிராம்.

செய்முறை:

நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம்.

நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

நன்னாரி சர்பத்:

 1. நன்னாரி – 200 கிராம்.
 2. தண்ணீர் – ஒரு லிட்டர்.
 3. சர்க்கரை – 1 கிலோ.
 4. எலுமிச்சம்பழம் – 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

செய்முறை:

 1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.
 2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.
 3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.
 4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
 5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும். தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநகைகளை சாப்பிட்ட மாடு… எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம் !
Next articleநரை முடியை கறுப்பாக மாற்றும் மந்திரம் கற்றாழை! சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்!