நடிகை தனுஸ்ரீ தத்தாவின் ஆவேசம்!

0
259

தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அப்போது காலா படத்தின் வில்லனான நானா படேகர் அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாக தனுஷஸ்ரீ குற்றம்சாட்டினார். இதனை மறுத்த நானே படேகர், சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.

தைரியமாக வெளிபடுத்துங்க
இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா இதுபற்றி அளித்த பேட்டியில், ‘புகார் குறித்து நானா படேகர் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் வெளியில் தெரியப்படுத்த வேண்டும். பயம் இல்லாமல் என்னை போல் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரியப்படுத்துங்கள்.

இதே போல் எவருக்காவது நேர்ந்திருந்தால் எந்த ஒரு அச்சுறுத்தல்களுக்கும் பயம் கொள்ளாமல் தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்’ என்று தனுஸ்ரீ தத்தா ஆவேசமாக பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: