நடிகரின் பதிலால் வாயடைத்து போன நடிகைகள்!

0
317

தம் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை, இந்தியில் ஆஷிக் பனாயா ஆப் னே போன்ற படங்களில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. நடிகர் நானா பட்டேகர் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தம்மை மானபங்கப்படுத்தியதாகவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நானேபடேகரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று கூறிய நானா பட்டேகர்,

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

தனுஸ்ரீ தத்தா தம்மீது புகார் கூறியிருப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நானா பட்டேகர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: