தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க!

0
1050

பொதுவாக இரவு உணவினை எடுக்கும் போதே சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரே உணவு காலையில்… பகல் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு வித பலனும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது வேறு மாதிரியான பலனும் கொடுப்பதுண்டு.

உண்ட உணவு செரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்,அதற்காக இரவு உணவினை குறைவாக சாப்பிடுங்கள், பழங்களைச் சாப்பிடுங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. சிலர் இரவு உணவு எடுத்துக் கொண்டு தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள். இன்னும் சிலரோ இரவு நன்றாக தூக்கம் வர வேண்டும் என்று சொல்லி வாழைப்பழம் சாப்பிடுவார்கள். அதோடு சிலர் ஒரு கிளாஸ் பாலையும் சேர்த்துக் கொள்வார்கள்.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகள், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டது, துரித உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு போன்றவை எல்லாம் உடலுக்கு தீங்கானது காய்கறி மற்றும் பழங்களை எந்த நேரத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது.

எந்த நேரத்திலும் என்றால் இரவு நேரத்திலுமா? உண்மையில் இரவு தூங்குவதற்கு முன்னால் வாழைப்பழம் சாப்பிடலாமா? தினமும் இதனை தொடரும் பட்சத்தில் வாழைப்பழம் உங்கள் உடல் நலனுக்கு எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்திடும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கிறது.

அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. அதனால் சோர்வாக உணரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது. இவை நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதோடு நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

வாழைப்பழத்தில் ஸ்டிரோல் என்ற சத்து உண்டு. இதுவும் நம் இதய நலனில் முக்கியப் பங்காற்றுகிறது. அதோடு இவை கெட்ட கொழுப்பு உடலில் தங்குவதை தடுத்திடும். இதிலிருக்கக்கூடிய நார்ச்சத்து நம் சாப்பிட்ட உணவினை எளிதில் செரிக்க உதவிடும். இதிலிருக்ககூடியது தண்ணீரில் கரையக்கூடிய நார்ச்சத்து என்பதால் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம்.

இந்த நார்ச்சத்து நாம் சாப்பிட்ட உணவினை செரிக்க பெரிதும் உதவிடுகிறது. ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான நார்ச்சத்தினை ஒரு வாழைப்பழம் பூர்த்தி செய்திடும். இதிலிருக்கூடியது பெக்டின் ஃபைபர் என்று சொல்லப்படக்கூடிய ஒரு வகை ஃபைபர்.

வாழைப்பழம் முழுதாக பழுக்கும் போது இதிலிருக்ககூடிய ஃபைபரின் அளவும் கூடுகிறது.

தூங்க சில நிமிடங்கள் முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல. வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம். வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும்.

வாழைப்பழத்தினை யாரும் ஸ்நாக்ஸ் என்ற ரீதியில் பரிந்துரைக்க மாட்டார்கள். அது ஒரு முழுமையான உணவு என்றே சொல்வார்கள். ஏனென்றால் வாழைப்பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின்ஸ் ,ஃபைபர் என ஏரளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

இவை முழுமையான உணர்வைக் கொடுப்பதுடன் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தினையும் கொடுத்திடும்.

வாழைப்பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும் என்பதற்காக எல்லாம் தயாராகி தூங்க செல்வதற்கு முன்னால் சாப்பிட்டுவிட்டு படுப்பது கூடாது. ஏனென்றால் அன்றைக்கு உங்களுக்கு தேவைப்பட்ட சத்துக்கள் எல்லாம் கிடைத்துவிட்டது உங்களுக்கு போதுமான உணவுகளை எடுத்து விட்டீர்கள். கூடுதலாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த வாழைப்பழம் உங்களுக்கு எக்ஸ்ட்ரா தான். இப்படி நீங்கள் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் பெரிய சைஸ் கேக் சாப்பிட்டதற்கு சமமாகும்.

இரவு தூங்குவதற்கு முன்னால் நாம் யாராவது கேக் சாப்பிடுவோமா?

சிலருக்கு குறிப்பிட்ட நியூட்ரிசியன்கள் மட்டும் பற்றாகுறையாக இருக்கும். அவரக்ளுக்கு வாழைப்பழம் பெஸ்ட் சாய்ஸ். அப்படி குறையக்கூடிய நியூட்ரிசியன்களில் மக்னீசியம் முதன்மையான இடஹ்தை வகிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் தவிர்ப்பவர்களுக்கும், நடு இரவில் திடீரென்று முழிப்பு வருகிறவர்களுக்கும் மக்னீசியம் குறைபாடு இருக்கக்கூடும்.

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். இதிலிருக்கக்கூடிஅய் டரைப்டோபான் உங்களின் அமைதியான தூக்கத்தை நிலைக்கச் செய்திடும்.

வாழைப்பழம் நம் உடலின் தட்பவெட்ப நிலையை கண்ட்ரோல் செய்திடுகிறது. அதோடு நம்முடைய ஹார்மோன் சுரப்பையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. தூக்கத்திற்கு விட்டமின் பி6 மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இது பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களில் தான் அதிகமிருக்கிறது. அதனால் தான் தூங்கும் போது, இரவு நேரத்தில் துரித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம், வெறும் பழங்களைச் சாப்பிடுங்கள் என்று சொல்லப்படுகிறது.

உங்களுக்கு போதுமான அளவு விட்டமின் பி ஒரு வாழைப்பழத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவை உங்களுக்கு நிறைவான உணர்வைக் கொடுக்கும்.

உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தினையும் தாண்டி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு அதீத பசி உண்டாகிடும். இதனை சரியாக்க நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை உணவாக நீங்கள் இதனை எடுக்கலாம்.

காலையில் வாழைப்பாம் சாப்பிடுவதால் உங்களது இன்ஸுலின் அளவு அதிகரிக்கும். அதோடு பிற உணவுகளையும் நீங்கள் சேர்த்து சாப்பிடும் போது அவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவினை அதிகரித்திடும்.

அப்படியானால் வாழைப்பழத்தை சாப்பிட சரியான நேரம் இரவு தான். இரவு என்றதும் தூங்கும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பு அல்ல இரவு உணவாகவே இதனை நீங்க்ள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருக்கும் சத்துக்களால் உங்களுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வே மேலோங்கும் விரைவில் பசியெடுக்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: