இந்த ஆறு இடங்களுக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்!

0

வாஸ்துப்படி ஒரு வீட்டை கட்டி முடிப்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் வீட்டினுள் அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் நிலவும். இந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டு கடவுளை நோக்கி நீங்கள் பூஜிக்கையில் நினைத்தது நிறைவேறும், சகல செளபாக்கியமும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.எனவே வீட்டை கட்டுவதில் இருக்கும் அளவீடுகளும் அமைப்புகளும் மிகவும் முக்கியம். அதை தவறாக அமைத்தால் நிறைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இங்கே வீட்டை எந்த இடத்தில் கட்டக்கூடாது என்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்துக்களின் புனித நூலான பவிஷ்ய புரான் குறுக்கான ரோட்டிற்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது என்று கூறுகின்றது. இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வீட்டை கட்டுவது வசிப்பதற்கு சரி வராது என்கின்றது. இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வீடானது இறைச்சி கடைக்கு அப்பால் இருப்பது தான் நல்லது. ஏனெனில் இறைச்சி கடையிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல் அங்கு அருகில் வசிப்பவர்களையும் பாதிக்க கூடும். இது வறுமையை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியை தடுக்கலாம்.

மருத்துவமனைக்கு அருகில் வீடு வாங்குவதை தவிருங்கள். ஏனெனில் கிருமிகள், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் எளிதாக உங்களை பரவக் கூடும். அடிக்கடி இறப்பு மற்றும் உடல் நல பாதிப்பு போன்றவை உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

எதாவது ஒரு வீடு பாழடைந்து போய் ரெம்ப காலமாக பூட்டியே இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டுவது எதிர்மறை ஆற்றலை இழுக்கும். இது ஒரு பெரிய வாஸ்து தோஷமாக கூறப்படுகிறது. இடிந்த நிலையிலோ அல்லது பாழடைந்த நிலையிலோ இருந்தால் வாங்காதீர்கள். ஏனெனில் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம்.

வாஸ்து சாஸ்திரம் படி மதுபானக் கடைக்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது. இந்து மதத்தின் படி கெட்ட சக்தி மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை மதுபானம், அசைவ உணவுகள் போன்றவற்றால் ஈர்க்க கூடும். எனவே வீடுகளை இந்த மாதிரி இடத்தில் இல்லாமல் சற்று தொலைவில் பார்ப்பது நல்லது.

சுடுகாட்டிற்கு அருகிலும் நாம் வீட்டை கட்டக் கூடாது. வாஸ்து சாஸ்திரம்படி எதிர்மறை ஆற்றல் நம் வீட்டினுள் வர வாய்ப்புள்ளது. அதே மாதிரி எதாவது தற்கொலைகள் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலும் வீடு வாங்க வேண்டாம். இதுவும் உங்கள் வீட்டின் ஆற்றலை பாதிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது என்பது தெரியுமா!
Next articleஇடுப்பிற்கு கீழே இவ்வாறு தலையணை வைத்து முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்!