திருமணக் கோலத்தில் நின்ற காதலன்! முன்னாள் காதலியின் செயலால் அதிர்ச்சி அடைந்த மனைவி!

0

சீனாவில் ஒருவருக்குத் திருமணம் நடந்து கொண்டிருந்த போது மணமகனுடைய முன்னாள் காதலியும் திருமணக் கோலத்தில் மேடையில் ஏறியமையால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ அந்நாட்டில் வைரலாகி வருகிறது.

சீனாவில் அண்மையில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடந்து முடிந்து இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பெண்ணொருவர் திருமணக் கோலத்தில் மேடைக்கு வருகிறார்.

அங்கு மணமகனின் கையைப் பிடித்துத் தன்னை ஏற்றுக்கொள்ளும் படி அப்பெண் கூறியுள்ளார். எனினும், மணமகன் இதனை ஏற்காமல் அவரது கையை உதறியுள்ளார்.

இதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு மேடையை விட்டுக் கிளம்பினார்.இதன் பின்னர் மணமகனும் மனைவியைத் தேடிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் மணமகனின் முன்னாள் காதலி கண்ணீர் மல்க மேடையில் அமர்ந்திருந்த காட்சி பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரணத்தண்டனை! வெளியான அதிரடி தகவல்!
Next articleஎலித்தெல்லையால் அவதியா! வெளிநாட்டினரையே வியக்க வைத்த தமிழனின் கண்டுபிடிப்பு!