தினமும் பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள்!

0

தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தும் நபர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.

தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நீக்க தினந்தோறும் ஒரு வேளை பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இந்த பிரச்சனை தீரும்.

நமது உடலில் பல இடங்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. அதில் ஈரல் புற்று, கணைய புற்று மிகவும் ஆபத்தான புற்று நோய்களில் ஒன்று. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு வேளையாவது குடித்து வந்தால், இவ்வகை புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

உடலின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. பீட்ரூட் ஜூஸை அருந்துவதால் சிறுநீரகங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. சிறுநீரும் நன்கு பிரியும்.

மூளை செல்களின் வளர்ச்சி குறைவதால் ஞாபக மறதி உண்டாகிறது. பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு. எனவே பீட்ரூட் ஜூஸை பருகுவது ஞாபக மறதியை போக்கும்.

தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூஸை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபீதியைக் கிளப்பும் காட்சி! கடலில் தரையிறங்கி மீண்டும் பறந்துச் சென்ற விமானம்!
Next articleஅட நம்ம ரம்பாவோட மூனாவது பையனா இது! பச்ச குழந்தையை பாருங்க!