திடீர் ராஜயோகம் கூரையை பிச்சிகிட்டு தேடி வரும்? தை மாதம் முழுவதும் சனி பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் பேரதிர்ஷ்டம்!

0

தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் சனிபகவான் எதிர்வரும் 16ஆம் திகதி கும்பத்திற்கு இடம் மாறுகிறார்.

தை 19ஆம் திகதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் திகதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.

தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கும்ப ராசி
இந்த மாதம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் குரு,கேது,சனி, தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

புதன் 16 ஆம் தேதி உங்க ராசிக்கு வருகிறார். சுக்கிரன் உங்க ராசியில் இருந்து 19ஆம் தேதி இரண்டாம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. தொழில் ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத இறுதியில் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து குரு கேது உடன் இணைகிறார்.

இந்த தை மாதத்தில் உங்களுக்கு இருக்கும் மனக்கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தை மாதம் உங்களுக்கு அபரிமிதமான வருமானத்தை தரப்போகிறது. தெய்வ அனுகூலத்தினால் உதவிகள் தேடி வரும். பிள்ளைகளினால் நன்மைகள் தேடி வரும். உங்க பொருளாதாரம் நிலையாக இருக்கும். சுக்கிரன் உங்க ராசியிலேயே சஞ்சரிப்பதால் முகத்தில் பொலிவு அதிகரிக்கும்.

வீடு சொத்துக்கள் சேரும். பயணங்களினால் நன்மைகள் அதிகமாகும். மனைவி வழியில் செல்வாக்கு அதிகமாகும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சுகங்களை அனுபவிக்கும் மாதம்.

மாதம் வார மத்தியில் சுக்கிரன் உங்க ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பணவரவு அதிகமாகும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் அதிகமாகும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும். படிப்பில் ரொம்ப முயற்சி பண்ணுங்க தேர்வு நேரம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்துங்கள்.

வியாபாரிகள் தொழில் லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்களினால் பொருள் லாபங்கள் தேடி வரும். ரொம்ப நல்ல மாதம் இது. ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் இன்னும் அதிகமாக வாங்காதீங்க இந்த மாதம் அகலக்கால் எதுவும் வைக்காதீங்க. பெருமாளுக்கு துளசி மாலை போட்டு வணங்குங்கள். நீங்கள் செய்யும் செயலில் வெற்றிகள் தேடி வரும்.

மீனம் ராசி
இந்த மாதம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு,கேது,சனி, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சனிபகவான் லாப ஸ்தானத்தில் உள்ள சூரியனோடு இணைகிறார். புதன் 16 ஆம் தேதி உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.

சுக்கிரன் உங்க ராசியில் இருந்து 19ஆம் தேதி உங்க ராசிக்கு வந்து உச்சமடைகிறார். தொழில் ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத இறுதியில் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் வந்து குரு கேது உடன் இணைகிறார்.

இந்த தை மாதத்தில் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். மீன ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானம் வரும் செய்யும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களுக்கு தொழில் லாபம் அதிகமாகும். கடன் கொடுத்த பணம் திரும்ப வரும் காலம் வந்து விட்டது. உங்களுடைய வசதிகள் அதிகமாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

பணவரவு அதிகம் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் சேர்க்கை அதிகமாகும். மனதிற்கு பிடித்த சிறப்பான வாழ்க்கை அமையும். குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் பணவரவு அதிகமாகும் கல்யாண யோகம் தேடி வருது.

திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நீங்க நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த காரியங்கள் இந்த மாதம் நடைபெறும். உங்களுடைய நண்பர்கள் மூலமும் நல்லவை தேடி வரும்.

ஊதிய உயர்வு கிடைக்கும் வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் நன்மைகள் நடைபெறும். வண்டி வாகன யோகம் அமையும். புத்திரபாக்கியத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.

மாணவர்கள் இந்த மாதம் புத்திசாலித்தனம் படிச்சிடும். ரொம்ப ஆர்வத்தோடு படிப்பீர்கள். இந்த மாதத்தில் எல்லாம் வல்ல முருகப்பெருமானை சஷ்டி திதியில் சென்று செவ்வரவு மாலை போட்டு வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று தை பொங்கல். 15.01.2020 பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன? இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி அமையப்போகிறது!இன்றைய பஞ்சாங்கம்!
Next articleJanuary Matha Rasi Palan 2020 தை மாதம் முழுவதும் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய இருக்கின்றது ! எந்த ராசிக்காரர்களின் வாழ்வு திருப்தியாக அமையும் !