தாலிக்­கொடி அறுத்­தோரை மடக்­கிப் பிடித்த மக்கள்!பொலிஸார் அவர்­களை ஏற்­க­ம­றுப்பு!!

0
311

தாலிக்­கொடி அறுத்­தோர் -மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் -பொலி­ஸார் அவர்­களை ஏற்­க­ம­றுப்பு!!
கிளி­நொச்சி அக்­க­ரா­ய­னில் உந்­து­ரு­ளி­யில் கண­வ­ரு­டன் சென்­று­கொண்­டி­ருந்த மனை­வி­யின் தாலிக்­கொ­டியை அறுத்த கொள்­ளை­யனை, கண­வ­னும் ஊர் மக்­க­ளும் இணைந்து மடக்­கிப் பிடித்­த­னர்.

அவர்­களை அக்­க­ரா­யன் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­போது ஏற்­க­ம­றுத்­துள்­ள­னர். பொது­மக்­க­ளுக்­கும், பொலி­ஸா­ருக்­கும் இடை­யில் கருத்து முரண்­பாடு இத­னால் ஏற்ப்­பட்­டுள்­ளது.

முறி­கண்­டி­யி­லி­ருந்து அக்­க­ரா­யன் செல்­லும் வீதி­யில் 4ஆம் கட்­டைப்­ப­கு­தி­யில் கண­வ­னும், மனை­வி­யும் உந்­து­ரு­ளி­யில் பய­ணித்­துள்­ள­னர். காட்­டுப்­ப­கு­தி­யில் மறைந்­தி­ருந்த இரு­வர் உந்­து­ரு­ளி­யைத் திடீ­ரென மறித்­த­னர்.

கண­வ­னைத் தள்ளி வீழ்த்­தி­னர். மனை­வி­யின் தாலிக்­கொ­டியை அறுத்­த­னர். அவர் தாலிக்­கொ­டியை இறு­கப் பற்­றிப் பிடித்­தி­ருந்­த­ மை­யால் தாலிக்­கொடி கொள்­ளை­ய­னின் கைக்­குச் செல்­ல­வில்லை.
கண­வன் அப­யக் குரல் எழுப்­பி­னார்.

ஊர­வர்­கள் அங்கு திரண்­ட­னர். கண­வ­னும், ஊர் மக்­க­ளும் திரண்டு கொள்­ளை­யர்­க­ளைத் துரத்­தி­னர். ஒரு­வர் கலைத்­துப் பிடிக்­கப்­பட்­டார். மற்­றை­ய­வ­ரும் மறைந்­தி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்­டுள்­ளார்.

இரு­வ­ரை­யும் அக்­க­ரா­யன் பொலி­ஸா­ரி­டம் மக்­கள் ஒப்­ப­டைத்­த­னர். அவர்­கள் முறைப்­பாட்டை ஏற்க மறுத்­த­து­டன், கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யு­மாறு கூறி­ய­தா­கத் தெரி­வித்த மக்­கள், கொள்­ளை­யர்­க­ளைப் பிடித்த எங்­கள் மீது வழக்­குத் தாக்­கல் செய்­யப் போவ­தா­க­வும் அச்­சு­றுத்­தி­னர் என்று குறிப்­பிட்­ட­னர்.

இதே­வேளை இந்­தப் பகு­தி­யில் இந்த மாதம் இரண்டு பெண்­க­ளின் நகை­கள் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாகப் பொது­மக்­கள் தெரி­வித்­த­னர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: