தாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்! நீ என்ன யோக்கியமா?

0
273

திருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்களுடன் தாய் சுற்றித்திரிந்த காரணத்தால் கோபம் கொண்ட மகன் தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

லட்சுமி என்பவரது கணவன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துசென்றுவிட்டதால் இவர் தனது இரண்டு மகன்களையும் தையல் வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார்.

மூத்தமகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 17 வயது உடைய இளைய மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி லட்சுமி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து மூத்த மகன் அதிர்ச்சியடைந்தார்.

விசாரணையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இரண்டாவது மகன், பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விவரத்தை அந்த மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் தாயார், அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது.

எனவே திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது மாணவனுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மாணவன் தனது தாயாரை பார்த்து “நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய்” என்று கூறியுள்ளான்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவன், வீட்டில் இருந்த கயிற்றால் தயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள கோவிலில் இரவு தங்கி உள்ளான்.

இதற்கிடையில் ஊர் பொதுமக்களுக்கு நடந்த விவரம் தெரிந்து விட்டதால் பயந்துபோய் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளான்.

நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக பொலிசிடம் அளித்துள்ளான்.

இது குறித்து பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: