தமிழ்நாட்டின் தேனியில் குடும்ப தகராறில், காவலர் மனைவி தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் பகுதியில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் அழகுதுரை. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துவிட்டு அழகுதுரையின் மனைவி ஜெயமணி தானும் தாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் ஜெயமணி இச்செயலை செய்தது தெரியவந்துள்ளது.
