தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் பகவானால் அடுத்த 21 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

0

தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் பகவானால் அடுத்த 21 நாட்களுக்கு அதிஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

இந்த டிசம்பர் மாதத்தில் செவ்வாய் விருச்சிகத்திலும், சுக்கிரன் மகர ராசியிலும் ஏற்கனவே பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில், தற்போது புதன் பகவான், குரு அதிபதியாக இருக்கும் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

இதனால் புதன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய அடுத்த 21 நாட்கள் என்னென்ன அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம் ராசி

மேஷ ராசியினர்களுக்கு பணவரவு, நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் சிறப்பான ஆதாயம் பெறுவீர்கள். அடுத்து, தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும். இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

மேலும், பணியிடத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் கைகொடுக்கும். இல்லறத்தில் நிம்மதி உண்டாகும். குடும்பம் சார்ந்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி

மிதுன ராசியினர்களுக்கு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் நிம்மதியும் இருக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். சூரியனின் பெயர்ச்சியால் மார்கழி மாதத்தில் உங்களுக்கு புதிய வேலைகளில் வெற்றி குவியும்.

மேலும், கல்வித் துறையில் இருக்கும் நபர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக இருக்கும். பணப்பரிவர்த்தனைக்கு மிக சிறப்பான காலமாக இருக்கும்.

கடகம் ராசி

கடக ராசியினர்களுக்கு உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். நிதி நிலைமை மிக சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களின் புகழ் பாடுவார்கள். முதலீடுகள் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

சிம்மம் ராசி

சிம்ம ராசியினர்களுக்கு இந்த டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறக்கூடியதாக இருக்கும். உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் அமையும். வேலைப் பளு குறையும். சூரிய பெயர்ச்சி நடக்கக்கூடிய மார்கழி மாதத்தில் உங்களுக்கு வெற்றிகள் குவியும். பணம் சார்ந்த பல புதிய வாய்ப்புகள் அமையும்.

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வரப்பிரசாதமான காலமாக இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசியினர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். செலவுகள் உங்கள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் நிகழும் போது உங்களுக்கு நிதி சார்ந்த பல நன்மைகள் உண்டாகும்.

எதிரிகளை வெல்லக்கூடிய சிறப்பான காலமாக இருக்கும். மேலும், பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேஷ ராசிக்கு பிறக்கப்போகும் 2022 புத்தாண்டு பலன்கள்! மேஷத்திற்கு கிடைக்கப்போகும் பேரதிர்ஷ்டம்!
Next articleஇன்றைய ராசி பலன் 12.12.2021 Today Rasi Palan 12-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!