தந்தை, காதலனுடன் இணைந்து இளம் பெண்கள் செய்த மோசமான செயல்!

0
329

மஹரகமயில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம, வீரமாவத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ படோலிட்ட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண், அவரது தந்தை , தாய், காதலன் மற்றும் 17 வயதுடைய சகோரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 400 – 500 கிராம் ஹெரோயின் போதை பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கியிருந்த வீடு மாதம் 28000 ரூபாய்க்கு வாடகை அடிப்படையில் பெற்று, போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: