தக்காளி சாஸை இதற்கு கூட பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு இதுவரைக்கும் தெரியாத‌ ஆச்சரியப்பட வைக்கும் டிப்ஸ்!

0
582

சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா என அனைத்துமே தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் தான் அது முழுமை பெறும். எனினும், சிலர் இதனை பெரிதாக விரும்புவதில்லை யாதலால், இவர்களால் கீழே போட்டு வீணடிக்கும் தக்காளி சாஸை சிறந்த முறையில் க்ளீனிங் ஏஜென்ட்டாக பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

இயற்கையாகவே அசிடிக் தன்மை கொண்ட தக்காளியை கெட்ச்அப் ஆக பயன்படுத்தும் போது அதிலுள்ள வினிகரால் ரெம்ப அசிடிக்காகி எளிதாகவும் இயற்கையான முறையில் மிவும் சிக்கனமாகவும் சுத்தப்படுத்துகின்றது. எனவே, அதன் மூலம் கஸ்ரப்படாமல் எளிதாகவே வீடு மற்றும் தோட்டங்களை சுத்தம் செய்ய முடியும்.

காப்பர்

தக்காளி சாஸை காப்பர் பாத்திரத்தில் நன்கு தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விட்டு, பின்னர் அதனை மென்மையான துணியை கொண்டு நன்கு துடைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவும் போது காப்பர் பாத்திரம் பள பளப்பதுடன், படிந்த கறைகள் ஏதும் காணப்பட்டால் இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கழுவும் போது அதுவும் நீங்கும். காப்பர் நகைகளுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும்.

பித்தளை

கதவு கைப்பிடி, வீட்டு பாத்திரங்கள், சிலைகள் மற்றும் குத்து விளக்கு என பித்தளையால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் நாளாக நாளாக நிறைய கருப்பு நிற திட்டுகள் படிகின்றன. இத்தகைய பெரிய பாத்திரததினை கெட்ச்அப்யை ஊற்றி துடைத்தும,; சிறிய பித்தளை பொருட்களை கெட்ச்அப்பில் ஊற வைத்தும் கழுவும் போது நல்ல மாற்றம் கிடைக்கும்.

வெள்ளி

பொதுவாக வெள்ளி பாத்திரங்கள் காற்றுடன் தொடர்பு கொண்டு காப்பர் ஆக்ஸைடாக மாறி கறுப்பாக மாறும் போது, அவற்றை தக்காளி கெட்ச்அப்பில் 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவுதல் வேண்டும். கவனிக்க, அதிக நேரம் ஊற வைக்கும் போது அசிடிக் என்பதால் வெள்ளி நகைகள் பழுதடைய கூடிய வாய்ப்புள்ளது. முதலில், பழைய பிரஷ் மூலம் தேய்த்தோ அல்லது துணியை பயன்படுத்தியோ கெட்ச்அப்யை பயன்படுத்தி வெள்ளி நகைகளை சுத்தம் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு முக்கி கழுவும் போது உங்கள் பழைய வெள்ளி நகைகள் புதியது போல் ஜொலிஜாலிக்கும்.

அடுப்பில் கருகிய பாத்திரங்கள்

அடுப்பில் வைத்து விட்டு மறந்து விட்ட அடி பிடிச்ச பாத்திரத்தை தக்காளி கெட்ச்அப் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் அதாவது கெட்ச்அப் தண்ணீர் வற்றாதவாறு சூடேற்றி, இரவு முழுவதும் ஊற வைத்தால் அடி பிடிச்ச கறுப்பு அடையாளமின்றி மறைந்துவிடும்.

உங்கள் கார் ஜொலிக்க

காரில் படிந்துள்ள தூசி கறையை நீக்கி கார் புதிது போல் ஜொலிப்பதற்கு எப்பொழுதும் போல் உங்கள் காரை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலசி விட்டு, துணியில் தக்காளி சாஸை எடுத்து நன்றாக காரின் மேல் தடவி பின்னர் தண்ணீர் கொண்டு அலசுதல் வேண்ம்.

இரும்புத் துரு

மம்முட்டி மற்றும் கோடாரி துரப்பிடித்திருந்தால், துருப்பிடித்த பகுதியில் தக்காளி சாஸை நன்கு தடவி தேய்த்து பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவதல் வேண்டும். மிகையான கறை காணப்படின் வாஷிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கழுவி அதனுடன் கெட்ச்அப் சேர்த்து தேய்த்தல் வேண்டும்.

தோட்ட கருவிகளை புதிதாக்குதல்

இரவில் தோட்ட செடிகளை வெட்டும் கருவிகள் மேல் தக்காளி சாஸை ஊற்றி நன்கு எல்லா பக்கமும் பரவச் செய்து, காலையில் நன்கு தேய்த்து கழுவுவதன் மூலம் புதிய பிளேடுடன் வெட்டும் கருவியினை பெற முடியும்.

வளர்ப்பு நாய்களின் துர்நாற்றத்தை போக்க

தக்காளி சாஸை ஊற்றி அதில் வளர்ப்பு செல்லப் பிராணியை 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் பின்னர் வளர்ப்பு நாய்க்கான ஷாம்பை பயன்படுத்தி நன்றாக அலசி விடும் போது அதன் மேல் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: