டாம் அன்ட் ஜெர்ரி இயக்குனர் காலமானார். Tom and Jerry

0

டாம் அன்ட் ஜெர்ரி இயக்குனர் காலமானார்.

உலகப்புகழ் பெற்ற டாம் அன்ட் ஜெர்ரி எனும் கார்ட்டூன் தொடரை இயக்கிய ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜீன் டெய்ச் அவர்கள் கடந்த 16-ந் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தமது இரங்கல்க‌ளை தெரிவித்து வருகின்றனர்

ஜோசப் பர்பெரா, வில்லியம் ஹன்னா ஆகியோரால் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர்.பின்னர்
ஜீன் டெய்ச்தொடரை இயக்கினார். இவர் பாப்பாய் எனும் கார்ட்டூன் தொடரின் சில எபிசோடுகளையும் இயக்கி உள்ளார்.மேலும் ‘மன்றோ’ என்ற கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கார் விருதும் வென்றுள்ளார்.

ஜீன் டெய்ச் அவர்கள் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்க தொடங்கிவிட்டார். டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூனை பார்க்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம் அவ்வளவு வேடிக்கைகள் நிறைந்த தொடர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை நதியாவின் மகள்கள் வைரலான புகைப்படம்!
Next articleசாமை பயன்கள் – Samai Benefits in Tamil (Little Millet)சாமை Samai Payangal Samai uses in Tamil Panicum sumatrense