ஜாமீனில் எடுக்க கெஞ்சி கதறும் அபிராமி! சீண்டாத சொந்த பந்தங்கள்!

0
286

கள்ளக்காதலுக்காக தான் பெற்ற பிள்ளைகளையே விஷம் வைத்துக் கொன்ற அபிராமி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தியானம், யோகா என பொழுதைக் கழித்து வரும் நிலையில், தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி அழுது வருகிறார்.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது.

சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது அபிராமியும் விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன.

இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை வி‌ஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.

குழந்தையை கொலை செய்த அபிராமி
இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக்கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

கதறி அழும் அபிராமி
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தியானம், யோகா என பொழுதைக் கழித்து வருகிறார். பெரும்பாலான் நேரங்களில் அழுது கொண்டே இருக்கும் அபிராமி, யாருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அபிராமியை அவரது உறவினர்களோ, சொந்த பந்தங்களோ இதுவரை யாரும் பார்க்க வரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள அபிராமி சிறை அதிகாரிகளிடம் தனது உறவினர்களிடம் கூறி தன்னை ஜாமீனில் எடுக்க வேண்டும் என கதறி அழுது வருவதாக கூறப்படுகிறது. சிறை அலுவலர்களும் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர்,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: