இயற்கை வழியில் சொத்தைப் பல்லை நீக்க சூப்பரான வழி இதோ!

0
4415

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளினால் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து, பற்களின் எனாமல் அரிக்கப்படுகிறது.

இதனால் பற்களின் உள் அடுக்கான டென்டின் பாதிக்கப்பட்டு, பற்களில் சொத்தைகள் ஏற்படுகிறது.

எனவே சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும்.

சொத்தை பற்கள் ஏற்பட என்ன காரணம்?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கனிமச்சத்துக்களின் குறைபாடு, கரையக்கூடிய கொழுப்பு விட்டமின்களின் குறைபாடுகள் போன்றவை இருப்பதால், பற்களில் சொத்தைகள் ஏற்படுகிறது.

தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உணவுகள் மற்றும் பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகள் இது போன்ற உணவு வகைகளை அதிகம் உண்பதாலும் சொத்தைப் பற்கள் ஏற்படுகிறது.

இயற்கையான பேஸ்ட்டை தயாரிப்பது எப்படி?

டயட்டோமேஷியஸ் களிமண் – 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

குளோரோஃபில் நீர்மம் – 1/4 டீஸ்பூன்

புதினா சாறு – 1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்

தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த டூத் பேஸ்டால் தினமும் பற்களை நன்றாக துலக்கினால் சொத்தைப் பற்கள் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: