நீங்க எந்த ராசிக்காரர்? அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்!

0

பணம் இல்லாமல் எந்தவொரு மனிதனும் வாழவே முடியாது என்பது தான் இன்றைய திகதியின் யதார்த்தம்!. ராசியை வைத்து ஒரு மனிதன் பண விடயத்தில் எப்படி செயல்படுகிறான் என்பதை கணிக்க முடியும் தெரியுமா?

மேஷம்

பொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விடயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை சமாளிக்க தயாராக இருப்பார்கள். அதே போல கொடுத்த கடன்களை எளிதில் வசூலிக்கும் திறன் கொண்ட இவர்கள், பெரும் கடன் தொடர்பான விடயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிகாரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக வரும். மேலும், பண விடயத்தில் சிக்கனமாக இருக்கும் இவர்கள் எதிர்காலத்திற்கும் பணம் சேர்ப்பார்கள்.தன்னிச்சையாக அதிகம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபாடு கொண்டால் அது அவர்களின் நிதி நிலையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

மிதுனம்

பணத்தின் மீது நாட்டம் குறைவாக உள்ள இவர்கள், அதிகம் சொத்துகளை சேர்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்கள் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்துதல் நலம்.

கடகம்

பண விடயத்தில் கெட்டிகாரர்களாக விளங்கும் இவர்கள், தங்கள் சேமிப்பு விடயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் நல்லது.

சிம்மம்

ஆடம்பர பிரியர்களான சிம்ம ராசிகாரர்களுக்கு பண விடயங்களில் நல்ல திறமை இருந்தாலும் பணத்தை சேமிப்பதில் அதிகம் வெற்றி அடைய மாட்டார்கள்.

கன்னி

பண விவகாரங்களில் நுணுக்கமாகவும், சிக்கனமாகவும் இருக்கும் இவர்கள் பண சேமிப்பை எப்போதாவது திறன்பட செய்தல் நன்றாக இருக்கும்

துலாம்

பண விடயங்களில் மந்தமாக இருக்கும் இவர்கள் அதிகம் செலவு செய்ய விரும்புவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிதி ஆலோசனைக்காக ஒருவரை நியமித்து வைத்து கொள்ளுதல் நல்ல பயன் அளிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்கள் பண விடயத்தில் ரகசியத்தை பேணுவதுடன், செலவு விடயங்களில் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.

தனுசு

இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், நேர்மறை சிந்தனையால் நிதி விடயத்தில் பொறுப்பில்லாமல் செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

மகரம்

நிதி கொள்கையில் ஒழுக்கமானவர்களாக இருக்கும் இந்த ராசிகாரர்கள், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல பலனளிக்கும்.

கும்பம்

முதலீடு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுக்க எப்போதும் கஷ்டப்படும் இவர்கள், நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான ஒன்றாகச் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மீனம்

மீன ராசிகாரர்கள் பண விடயத்தில் பொதுவான போக்கு உடையவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம், அதனால் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி வருவதை தடுக்க என்ன செய்யலாம்?
Next articleஅதிரடி உத்தரவு! ஆண்மை பரிசோதனைக்கு தப்பித்த நித்தியானந்தா!