செல்பி எடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி? ஒருமணி நேரத்தில் நடந்த அதிசயம்! காணொளி உள்ளே!

0
352

மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ரயில் மேம்பாலத்தில் ஏறி செல்பி எடுக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்ததில் உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் 3000 வோல்ட் மின்சரம் பாய்ந்து கொண்டிருந்த அந்த கம்பியில் விழுந்தும், அவளது உடல் தரையைத் தொடாததால் அவள் உயிரிழக்கவில்லை.

தனது தோழியுடன் குளிக்கச் சென்ற அந்த இளம்பெண் பாலத்தின் சுவர் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றிருக்கிறாள்.

அப்போது கால் தடுக்கி அவள் மின் கம்பியில் விழுந்து விட்டாள். அவளுடன் மொபைலில் பேசிக் கொண்டே வந்த தோழி என்ன ஆனாள் என்பது குறித்து தெரியவில்லை.

ஒரு மணி நேரமாக அவள் கவனிப்பாரற்று தொங்கிக் கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த ரயில் ஒன்றின் ஓட்டுனர் மின் கம்பியில் ஒரு பெண் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவசர பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டு போன் செய்து மின்சாரத்தை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

இதற்குள் அங்கு வந்த சிலரில் ஒருவர் ஒரு கயிற்றின் உதவியால் அந்தப் பெண்ணை கீழே இழுக்க மற்றவர்கள் ஒரு போர்வையை விரித்துப் பிடித்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இதில் விந்தையான விடயம் என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியதும் அவளுக்கு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை என்பதுதான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: