சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி

0

இன்றை அவசர உலகில் எமது குழந்தைகள் தினமும் விதவிதமான சுவையான சமையலை எதிர்பார்கின்றனர். தினம் ஒரு சமையல் செய்ய கஸ்ரமா? இதோ உங்களுக்காக “புதினா புலாவ்” தயாரிப்பதற்காள செய்முறையைக் கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப்

உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி

கிராம்பு – 2

பட்டை – 1ஃ2

ஏலக்காய் – 1

நெய் – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மசால் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:

புதினா – 1 கட்டு

துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1/2

செய்முறை:

முதலில் அரிசியை தண்ணீரில் 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்கவும். பின்னர், அதனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், புதினா, தேங்காய் துருவல், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை சேர்த்து மிக்சியில் நன்கு பட்டு போல நன்றாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து, குக்கரை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை ஆகியனவற்றைச் சேர்த்து நன்கு பொன் நிறம் வரும் வரை தாளித்து, பின்னர்; இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கி அதனுடன், வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்குதல் வேண்டும். பின்னர், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 3 நிமிங்கள்; நன்கு கிளறி விட்டு இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை குக்கரை மூடி வேகவைத்து இறக்கினால், சுவையான புதினா புலாவ் தயாராகி விடும். வாங்க சுவைக்கலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசரும நோய்கள், வெண்படலம், மலச்சிக்கல், வீக்கங்கள், பால் சுரப்பு என்பவற்றுக்கு சிறந்த நிவாரணி இலுப்பை ! இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்!
Next articleToday Rasi Palan 25-01-2020 இன்றைய ராசி பலன் 25.01.2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Today Calendar 25/01/2020 Friday Indraya Rasipalan