சுவிஸில் வாடகைக்கு வீடு தேடி சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
345

சுவிட்சர்லாந்தில் வீடு வாடகைக்கு கேட்டு சென்ற குடும்பத்திடம் வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமாக அதிகளவில் வைப்புத் தொகை கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜூரிச்சை சேர்ந்த ஒரு குடும்பம் அங்குள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு செல்ல முடிவெடுத்தது.

அந்த குடும்பத்தின், குடும்ப தலைவி பணிக்கு செல்லாத நிலையில் குடும்ப தலைவர் முழு நேர வேலையில் இருந்துள்ளார். தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

குறித்த வீட்டில் 3000 பிராங்குகளுக்கும் குறைவாக மாதம் பணம் வசூலிக்கப்படும் என்பதை அந்த குடும்பத்தார் அறிந்திருந்த நிலையில் அது குறித்து வீட்டு உரிமையாளரிடம் பேசினார்கள்.

பொதுவாக சுவிஸ் சட்டத்தின்படி மூன்று மாதத்துக்கு அதிகமான வைப்பு தொகையை வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வருபவர்களிடம் வசூலிக்கக்கூடாது.

ஆனால் அந்த உரிமையாளரோ ஒன்பது மாத தொகையான 27000 பிராங்குகளை முன் தொகையாக குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மற்ற ஆவணங்களில் கையெழுத்திடாமல் அதை திரும்ப பெற்றுகொண்டு அந்த வீடே வாடகைக்கு வேண்டாம் என கூறி திரும்பியுள்ளனர்.

இது குறித்து பின்னர் கூறிய வீட்டு உரிமையாளர், 9 மாதம் வைப்பு தொகையை கேட்பது சட்டவிரோதம் என்பது எனக்கு தெரியும், அதனால் தான் அந்த பணத்தை சட்ட வைப்பு கணக்குக்கு பதிலாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கொடுத்து விடுமாறு அந்த குடும்பத்தாரிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார்.

இந்தளவு அதிக பணத்தை வீட்டு உரிமையாளர் வைப்பு தொகையாக கேட்பதை தற்போது தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன் என சட்ட நிபுணர் ரியூடி ஸ்பாண்ட்லின் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: