சுர்ஜித்தை மீட்க இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது.
சுர்ஜித்தை மீட்க அதிகரிகள், மற்றும் பல்வேறு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7:05 மணியளவில் இருந்து ரிக் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஆழமாகவும் வேகமாகவும் துளையிட போர்வெல் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நல்லபலன் தரவில்லை என்று மீண்டு ரிக் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு வருகின்றது.
ஆனால், தற்போது அந்த இடத்தில், லேசான மழை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து தற்போது துளையிடும் இரண்டாவது கருவி நெடுகாட்டுபட்டிக்கு வந்தடைந்துள்ளது. இது 3மடங்கு அதிகம் திறன் கொண்ட கருவி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் இன்னும் வேகமாக இந்த பணிகள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.