சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி.

0

டாக்ரா் பீலா ராஜேஷ் அவா்கள் கொரோனா குறித்து பேட்டி அளித்துள்ளாா்.

தமிழகத்தில் கொரோனா Test சரியாக செய்யப்பட்டு வருகிறது. பலருக்கு அறிகுறி இல்லை. ஆனால் இரண்டு மணி நேரத்தில் நிலை மாறுகிறது. அறிகுறி இல்லாமல் பலர் பலியாகிறார்கள். அதனால் நீங்கள் எங்கள் நிலையை புரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுக்க இந்த பிரச்சனை உள்ளது. மருத்துவர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். நாங்கள் வைரஸின் ஆர் என் ஏவை சோதனை செய்கிறோம்.

ஆர்என்ஏ சோதனை செய்வதன் மூலம்தான் கொரோனாவை கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட் முறையைத்தான் கடைபிடிக்கிறோம். இன்று உங்களுக்கு டெஸ்ட் செய்தால் நெகடிவ் என்று வரலாம். ஆனால் 28 நாட்களுக்குள் உங்களுக்கு கொரோனா வரலாம். ஒருமுறை நெகடிவ் வந்தால் தொடர்ந்து நெகட்டிவ் வரும் என்று கூற முடியாது. மறுபடியும் சொல்கிறேன். நாங்கள் அதிகமாக டெஸ்ட் செய்கிறோம். போதுமான சோதனை சாலைகள் தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறது.

Testing சாதனங்கள் Order செய்துள்ளோம். எல்லா அரசு மருத்துவ கல்லூரியிலும் சோதனை செய்யும் அளவிற்கு தயார் செய்து வருகிறோம். எங்களின் சோதனை சாலைகளை இன்னும் அதிகரிக்க முயன்று வருகிறோம் . இதற்காக 12 குழுக்களை அமைத்து இருக்கிறோம். சோதனை சாலைகளை எங்கு எல்லாம் அமைக்கலாம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்யவே தனியாக குழு அமைத்து உள்ளோம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த இளம்பெண். இறுதியில் நேர்ந்த பரிதாபம்!
Next articleஆறு வயது மகளை அடி த்து கொ(ன்) ற தந்தை.