சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு பழமாகும். சீதாப்பழத்தின் சுவை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஒருபோதும் அதன் கொட்டைகளில் இருக்கும் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். பல்வேறு பழங்களின் விதைகளை நாம் பயனற்றவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் குப்பையில் எரியும் பழங்களின் விதைகள் உங்களுக்கு பல வகைகளில் உதவக்கூடும். அந்த வகையில் நீங்கள் வீணென்று நினைக்கும் சீதாப்பழத்தின் விதைகள் உங்களுக்கு நம்பமுடியாத நன்மைகளை வழங்கக்கூடும். இந்த வகையில் சீதாப்பழத்தின் கொட்டைகள் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தலைப்பேனை நீக்குகிறது
பேன் மற்றும் ஈறுகளால் தலையை சொரிந்தே நீங்கள் சோர்வடைகிறீர்களா? இதை போக்க கடைகளில் கிடைக்கும் ஷாம்பூ மற்றும் எண்ணெய்களால் எந்த பயனும் கிடைக்கவில்லையா?. இந்த தொல்லையைப் போக்க சீதாப்பழ கொட்டைகளை பயன்படுத்துங்கள். இதனை தூளாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து பசை போல செய்து கொள்ளவும். இதனை தலையில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும், பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும். இந்த செயல்முறையை மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், பேன் தொல்லைகளில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.
பூச்சிகளை விரட்டும்
உங்கள் வீட்டில் பூச்சிகள் மற்றும் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் அதனை சரிசெய்ய இந்த கொட்டைகளை பயன்படுத்தலாம். கொட்டைகளை அரைத்து நீரில் ஊறவைத்து அதனை மூன்று நாட்கள் ஊறவிடுங்கள், பின்னர் அந்த கலவையை உங்கள் வீட்டில் பூச்சிகள் அதிகமிருக்கும் இடங்களில் வைக்கவும். இதனால் கிடைக்கும் பலன்கள் அற்புதமானவையாக இருக்கும்.
பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி
இந்த கலவையை நீங்கள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம். தாவரங்களை உண்ணும் பூச்சிகளை விரட்ட 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செடிகளுக்கு தெளிக்கவும். இது உங்கள் செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும்.
மருந்துகளில் பயன்பாடு
இந்த பழத்தின் விதைகள் மருந்து நிறுவனங்களால் மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்ட அபோர்டிஃபேசியண்ட் பண்புகள் காரணமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் இந்த விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வியாபார வேளாண்மை பூச்சிக்கொல்லிகள்
சீதாப்பழ கொட்டைகளும், வேப்பங்கொட்டைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் சக்திவாய்ந்த நச்சு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி இயற்கையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதது. இந்த விதைகளில் இருந்து விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இயற்கை எரிவாயு உற்பத்தி
ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த சிறிய விதைகளை வணிக நோக்கத்தின் பொருட்டு இயற்கை உற்பத்திக்காக பயன்படுத்துகிறது. இந்த பழத்தின் விதைகளில் மீதில்-எஸ்டர் நிறைந்த முக்கிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை வாயு உற்பத்தியைத் தூண்டுகின்றன.
பிற பயன்கள்
பல நாடுகளில் இந்த விதைகள் அவற்றின் நச்சுத்தன்மை காரணமாக மீன்களை பிடிக்க பயன்படுத்தி வருகிறார்கள். இதனைக் பயன்படுத்தும் போது அதிகளவு மீன்கள் கிடைப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
எச்சரிக்கைகள்
சீதாப்பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததுதான், ஆனால் இந்த விதைகள் இயற்கையில் மிகவும் நச்சுத்தன்மையுடையவை மற்றும் இதன் தற்செயலான நுகர்வு கருக்கலைப்பை ஏற்படுத்தும், ஏனெனில் அவற்றில் சிறிதளவு விஷம் உள்ளது. இந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது தற்காலிக பார்வையிழப்பை ஏற்படுத்தும். எனவே இதனை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.