சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் !
சிறுநீரக கோளாறு, உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சாறுவேளை இலையை எடுத்து நன்றாக கழுவி கீரை போல் சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.
தினமும் ஒரு முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் சரியாகும்.
நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்றாக இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைத்தல் ஒரு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி வந்து கழுவி சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து அரை டம்ளர் சாற்றில் மோர் கலந்து காலையில் மட்டும் 7 நாள் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் பூரண குணம் அடையும்.
சிறுநீரகத்தில் கல் ஏற்படுதல், உடல் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்படுதல் கருஞ்சீரகத்தை நன்றாக இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு ஏற்படுவது குறையும்.
சிறுநீரகத்தில் கல் நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், நீர்முள்ளி காய்நத சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்றாக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி சிறுநீரகக் கல் குறையும்.
மாவிலங்கப்பட்டையை இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கல் அடைப்பு குறையும்.
பீன்ஸ்-ன் விதையை நீக்கி, தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து,மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, இரண்டு லிட்டர் நீரை (ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேர இடைவெளியில்) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
தினமும் வாழைத்தண்டை சமைத்து உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீரக கல் கரையும்.
சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை: உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சுறுசுறுப்பின்மை, வாந்தி, சிறுநீரக வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பிரமிய வழுக்கை இலையை சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி காலை, மாலை என ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீர் மிகுதியாக பிரிதல் போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை பிசினை நன்றாக பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.
அதிகமாக சிறுநீர் பிரிதல் சகசாவை கல் நீக்கி இடித்து பொடி செய்து அதில் அரை கரண்டி எடுத்து காலை, மாலை என இரண்டு வேளை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் அதிகமாக சிறுநீர் பிரிதல் குறையும்.
ஆரைக்கீரையை சுத்தம் செய்து சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் அதிகமாக சிறுநீர் பிரிவது நீங்கும்.
வெண் முள்ளங்கியை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட தொடந்து கொடுத்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குறையும்.
சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், முருங்கை, நெல்லி, வெள்ளரி, கேரட், இளநீர், எலுமிச்சை ஆகியவற்றை சாறு எடுத்து குடித்திட சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
சிறுநீர் கோளாறு, சிறுநீர் தொற்று கிருமிகள் போன்ற பிரச்சனைகளுக்கு
தாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலையும் மாலையும் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
இளநீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் போன்றவை குறையும்.
குருதிநெல்லி பழங்களை சாறு எடுத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் ஆகியவை குறையும்.
சிறுநீர் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினந்தோறும் காலையும் மாலையும் குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் இரண்டு டீஸ்பூன் துளசி இலைச்சாறில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது. தொடர்ந்து ஆறு மாதங்கள் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுதல் பரங்கிகாய் விதை, வெள்ளரி விதை, பூனை காலி விதை ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து நீர்விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீருடன் இரத்தம் வருதல் மாதுளம்பூ, வேம்பு, கசகசா ஆகியவற்றை சூரணம் செய்து மூன்று முறை 5 மிளகளவு பாலுடன் சேர்த்து குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீரக வீக்கம் பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து இரண்டு டீஸ்பூன் பொடியை சூடான வெந்நிரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து முன்று மாதம் குடித்து வந்தால் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.
சிறுநீர் எரிச்சல், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலையும் மாலையும் 30 மில்லி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
சிறுநீர் கட்டுதல், சிறுநீர் எரிச்சல் கருஞ்செம்பை இலைகளை எடுத்து சாறு பிழிந்து 10மி.லி அளவு தொடர்ந்து குடித்து வர சிறுநீர் கோளாறு குறையும்.
சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவு குறைந்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கு அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.
By: Tamilpiththan