சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் சிறந்த சில வழிகள்.

0

தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும்.

சிறுநீரக கற்களானது ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்க நீங்கள் முடிவெடுத்து இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை முதலில் படித்து அதை சில நாட்கள் பின்பற்றி, பின்பு அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள்.

ஏனென்றால் இந்த கட்டுரையில் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்கும் அல்லது அவற்றை வெளியேற்றும் ஓர் அற்புத இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், அது 6 நாட்களில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 100 மிலி
ஆலிவ் ஆயில் – 100 மிலி
பீர் – 100 மிலி

செய்முறை:

ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இந்த கலவையை தினமும் காலையில் 50 மிலி குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்கும் முன், பாட்டிலை நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி தினமும் காலை என தொடர்ந்து 6 நாட்கள் பின்பற்றி வந்தால், சிறுநீரக கற்கள் மாயமாய் மறையும்.

குறிப்பு
எலுமிச்சையை வாங்கும் போது நன்கு பார்த்து, ஆர்கானிக் பழங்களை வாங்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது கடைகளில் செயற்கை எலுமிச்சை சாறுகள் விற்கப்படுகின்றன. இந்த மாதிரியான ஜூஸ்களைப் பயன்படுத்தாதீர்கள். அதேப் போல் உங்களுக்கு 15 mm விட பெரிய அளவில் சிறுநீரக கற்கள் இருந்தால், அது கரைந்து சிறுநீர் வடிகுழாய் வழியே வெளியேறும் போது, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வழி #1
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை வாரத்திற்கு 1-2 முறை ஒருவர் குடித்து வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஆப்பிள் வீடர் சினிகரில் உள்ள உட்பொருட்கள், சிறுநீரக கற்களைக் கரையச் செய்து, எளிதில் வெளியேற்றும்.

வழி #2
1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், அதில் உள்ள அசிட்டிக் பொருள், கற்களைக் குறைத்து, சிறுநீரகத்தில் இருந்து எளிதில் வெளியேறச் செய்யும்.

வழி #3
தினமும் 1-2 இளநீரைக் குடித்து வர வேண்டும். இப்படி ஒரு வாரம் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களை விரைவில் வெளியேற்றும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சிறுநீரில் உள்ள அமிலத்தை காரத்தன்மையாக்கி, கற்களைக் கரையச் செய்யும். மேலும் இளநீர் உடல் சூட்டையும் தணிக்கும்.

வழி #4
1/4 கப் பார்லியை 3 கப் நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த பார்லி அதே நீரில் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். நீரானது பாதியாக குறைந்ததும் அதை இறக்கி, வடிகட்டி குளிர வைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை ஒரு நாளைக்கு சில முறை குடித்து வர, சீக்கிரம் சிறுநீரக கற்கள் கரையும்.

வழி #5
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் அஸ்பாரகஸை சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அஸ்பாரகைன் என்னும் பொருள், சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். இந்த காய்கறிகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரின் வழியே சிறுநீரகங்களைக் கரைத்து வெளியேற்றும்.

வழி #6
ஒரு வெள்ளை முள்ளங்கியின் தோலுரித்து, அதனைத் துருவி, சாறு எடுத்து, தினமும் காலையில் 100 மிலி குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இப்படி சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள கற்கள் கரைத்து வெளியேறிவிடும்.

வழி #7
5-6 துளசி இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு 7-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் கலந்து டீ போன்று வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வழி #8
திராட்சை சிறுநீரக கற்களை சரிசெய்யும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக கற்களைக் கரைக்கத் தேவையான உட்பொருட்களாகும். இதை தினமும் ஒருவர் சிறிது சாப்பிட்டு வந்தால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை வராமல் தடுக்கும்.

வழி #9
தர்பூசணியில் ஏராளமான அளவில் நீர்ச்சத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பழத்தை சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது. இது சிறுநீரகங்களில் உள்ள கற்களை வலியின்றி எளிதில் வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், கற்களின் அளவைக் குறைக்க உதவி, விரைவில் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுமியை நிர்வாணப்படுத்தி சூடுவைத்து சித்ரவதை! இளம் வயதில் காதல்!
Next articleகணவன் செய்த காரியத்தை பாருங்கள்! எரிந்து கொண்டிருந்த உடலை கைபற்றிய பொலிசார்!