ஆண்களே ஓரு பெண் சிறந்த ஆண்மகன் என தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கும் 8 விடயங்கள் எவை தெரியுமா? இவ்வளவும் தானாம்?

0
1279

வெற்றுக் கண்ணால் காணக் கூடிய ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் மற்றும் ஆறு இன்ச் என்பன உள்ளடங்கிய உடல்ரீதியாக, உடலமைப்பை வைத்து மட்டும்; ஒரு ஆண் என யாரால் வேண்டுமானாலும் கூறிவிட முடியும். ஆனால், ஒருவன் ஆண்மையுடையவன், சிறந்த ஆண்மகன் என்பதனை அந்த நபரிடம் காணப்படும் சில விசேட குணாதிசயங்கள், பண்புகள் என்பன தான் தீர்மானிக்கின்றன என பெண்கள் கூறுகின்றனர். அதாவது, எவ்வாறு ஆண்களால் பெண்களிடம் சில விசேட குணாதிசயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனவோ. அதே போல் ஆண்களிடமும் பெண்கள் சில விசேட குணாதிசயங்களை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய 8 வகையான விசேட குணாதிசயங்களில் உங்களிடம் எத்தன உள்ளன என்பதனை நீங்களே கணக்கிட்டு தெரிந்து; கொள்ளுங்கள்.

சூழ்நிலைகளை கையாளும் முறை

எதிர்வினை சூழல்நிலைகளை எவ்வாறு நேர்வினை சூழல்நிலைகளை மாற்ற முடியும்;, கடுமையான சூழல்களில் எவ்வாறு அனைவரும் ஆசுவாசப்படுத்த முடியும்; மற்றும் சண்டைகளை பெரிய விடயமாக்காமல் அதனை எவ்வாறு நிறுத்துவது என எந்தவொரு ஒரு சூழல்நிலையிலும்; அதனை மிகத் துல்லியமாக கையாள தெரிந்த நபரே சிறந்த ஆண்மகனாக கொள்ளப்படுவார்.

முன் நின்று செயல்படும் குணம்

எந்த ஒரு வேலை அல்லது செயலின் போதும் மற்றவர் செய்யும் வரை அல்லது பிறர் அதை செய்யும் படி கூறும் வரை காத்திராமல் தானாக முன்வந்து செய்யும் போது அது அவனை ஒரு தலைவனாக எடுத்துக் காட்டும். இது குடும்ப தலைவனாக போகும் ஒரு ஆணிடம் அவசியம் காணப்பட வேண்டியப ண்பாக உள்ளது.

தற்கால நிகழ்வுகளை தெரிந்து வைத்திருத்தல்

காலப் போக்கிற்கு ஏற்ப வல்லுனராக இல்லாவிட்டாலும் எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை விஷயங்களாவது தெரிந்திருத்தல் வேண்டும்.

குடும்ப அக்கறை அன்பு

அதிகளவான பணத்தை உழைப்பதனை விட உறவுகளை சேர்த்தல், குடும்ப உறவுகளை வலிமையாக கட்டமைத்தல், குடும்ப பொறுப்புகளை சுமத்தல், பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்தல் மற்றும் அதற்கேற்ப நடந்துக் கொள்ளும் நபராக இருத்தல் வேண்டும்.

எதிர்காலத்தை சரியாக திட்டமிடுதல்

எதிர்கால திட்டங்கள் வழிவகுத்து, அதற்காக உழைககக் கூடிய அதாவது தமது கனவுகளை எதிர்நோக்கி பயணிக்கும் அதனை சாதிக்கும் பண்பு கொண்ட சொந்த காலில், சுய சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

சமூக அக்கறையுடன் செயல்படுதல்

சமூகத்தில் குறைந்தபட்சம் தனது ஏரியாவில் தனது பங்களிப்பை வழங்கி அனைவரும் கொஞ்சமாவது அறிந்த நபர் என்ற அளவிற்காகவது பிரபலமாக இருத்தல் வேண்டும்.

அதிகமாக அழகுபடுத்த‌ வேண்டாம்

அல்ட்ரா மாடர்ன் ஆண்மகன்களை பார்கும் போது ஒரு வகையான ஈர்ப்பு வரும் அதேவேளை, ஃப்ளர்ட் அல்லது ப்ளேபாயாக இருப்பானோ? என்ற அச்சம் தோன்றுவதுடன், அவன் தான் எனக்கானவன் என்ற எண்ணம் ஏனோ தோன்றுவதில்லை. எனவே , அல்ட்ரா மாடர்ன் ஆக இருக்கத் தேவையில்லை.

அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு!

இறுதியாக, நம்ம தலைவர் ஸ்ரைலில் கூறுவதாயின், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… அன்பாக, அக்கறையாக, தன்னையே எல்லாம் என நம்பி வரும் பெண்ணுக்கு நல்ல பாதுகாவலனாக இருத்தல் வேண்டும்.

இது போன்ற மேற்குறிப்பிட்ட பண்புகள் தான் ஓர் ஆண்மகனை ஆண்மையுள்ளவனாய் எடுத்துக் காட்டும் என பெண்கள் கூறுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியில் கசிந்த ரகசியம்: உயிரை விட்ட இளம் விதவை!
Next articleஉலகிலேயே கொடிய தகாத உறவால் ஏற்படும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு பரவுகிறது தெரிந்து கொள்ளுங்கள் !