சித்ரா பவுர்ணமி தினமாகிய இன்று மாலை 6 மணிக்கு இதை மட்டும் செய்தால் போதும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வு சிறப்படையும் ப.ண மழை பொழியும்.

0
393

பவுர்ணமி தினமாகிய இன்று சந்திர பகவானை தரிசனம் செய்து வழிபாடு செய்வது பல நல்ல பலன்களைக் கொடுக்கும். மாதம் தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் நம்முடைய பூமிக்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய நாள் என்று கூட சொல்லலாம். சந்திர பகவானின் ஒளி கதிர்கள் அதிகமாக இந்த பூமியை வந்தடைய கூடிய இந்த தினத்தை யாரும் தவறவிடாதீர்கள்.

சந்திர பகவானின் அருளாசியை பெற்று நம்முடைய வாழ்வில் முன்னேற்றம் பெற்று நமக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர எல்லா நன்மைகளையும் அள்ளித்தர கூடிய ஒரு வழிபாடு தான் பவுர்ணமி நிலவு வழிபாடு.

பவுர்ணமி நிலவு வழிபாடு செய்வது என்று பார்க்கலாமா?

இன்று சித்ரா பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணி அளவில் உங்கள் வீட்டில் சந்திர பகவானை எந்த இடத்தில் தரிசனம் செய்ய முடியுமோ அந்த இடத்தில் செய்யலாம். எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் ஆனால் சந்திர பகவானின் தரிசனம், நிலவின் ஒளிக்கதிர்கள் உங்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் தட்டில் இருக்கும் பச்சரிசியின் மேல் விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களிடம் இருக்கும் ஓர் புதிய வெண்ணிற‌ காட்டன் துணியை எடுத்து அந்தத் துணியை சதுர வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். தூய்மையான‌ எச்சில் படாத ஒரு தட்டையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டின் மேல் துணியை விரித்து அந்தத் துணியின் மேல் இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு நன்றாக பரப்பி விட்டு பச்சரிசியில் உங்களது வலது கை ஆள்காட்டி விரலைக் கொண்டு, ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து, அந்த ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவே 1 ரூபாய் நாணயத்தை காணிக்கை வைத்து பின் சந்திர பகவானை இரண்டு கண்களாலும் தரிசனம் செய்து கொண்டே தயார் செய்த தட்டை உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்துக் கொண்டு சந்திர பகவானிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு துணியின் மேல் வைத்த பச்சரிசியையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் அப்படியே சிறிய முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த பௌர்ணமிக்கு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடவேண்டும். பச்சரிசியை பறவைகளுக்கு தானியம் ஆக போட்டு விட வேண்டும்.

மாதந்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பணக்கஸ்டம் தீரும், உடல் ஆரோக்கியம் பெறும், மனதில் புது தென்பு பிறக்கும்.

By : Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: