மாங்கொட்டையை இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் காணாமல் போயிடும்!

0
3940

சத்துக்கள்

மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.

சரும அழகு

மாம்பழத்தில் உள்ள மற்றொரு ஊட்டச்சத்து, சருமத்துக்கு பொலிவுதரும், AHA எனும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம். தோலின் மினுமினுப்புக்காக, கிரீம்களிலுள்ள இந்த செயற்கை அமிலத்தை நாடவேண்டியதில்லை. அதற்குபதில், மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது, அதில் இயற்கையாகவே உள்ள AHA, உடலின் சருமத்தை ஜொலிக்கவைத்து, மென்மையாக்கும்.

மாங்கொட்டை

சாதாரணமாக மாம்பழத்தை ருசிக்கும் அனைவரும், அதன் சாற்றை கொட்டைவரை நன்கு உறிஞ்சி சுவைத்துவிட்டு, கொட்டையை வீசிவிடுவார்கள். சிலர் மட்டுமே, கொட்டையை எடுத்துப் போய், கவனமாக, ஒரு இடத்தில் விதைத்து வைப்பார்கள். வருங்காலத்துக்கும் மாம்பழம் கிடைக்கவேண்டுமே, என்ற அக்கறையால்!

மாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான். அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை.

ஊட்டச்சத்துக்கள்

மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன. 1௦௦ கிராம், மாங்கொட்டையில் உள்ள தாதுக்கள்; நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம்.

இத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் உடலின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்துவிடும். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா?

இரத்த சோகை

இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

கண் கீழிமைகளை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம், அவற்றின் பின்புறம், இரத்த ஓட்டம் இன்றி, தோல் வெளுத்து காணப்படுவதை வைத்து, இரத்த சோகையின் அளவை அறியலாம். இவர்களுக்கு, அடிக்கடி சோர்வும் தலைவலியும் ஏற்படும். இரத்த சோகை பாதிப்பை இயற்கையாக குணப்படுத்துவதில், பல காலமாக, மாங்கொட்டை பயன்படுகிறது. மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, உடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி, உடல் வறண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். மாம்பருப்பு, அந்த பாதிப்பைப் போக்கும். மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

கர்ப்பிணிப் பெண்கள்

மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

உடல் பருமன்

உடல் எடைக்குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம். மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். அதையும் முயன்று பார்க்கலாம். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக்குறைக்கமுடியும்.

கொழுப்பு.

உடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது. வயதாகும்போது, உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து, எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம், அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம். இதன்மூலம், கொழுப்பைக் கரைக்கமுடியும்.

உயர் இரத்த அழுத்தம்

இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும். இதயத்தூய்மை என்றவுடன், ஏதோ, தத்துவ வகுப்போ, போதனைகள் செய்து நம்மை, நூடுல்ஸ் ஆக்கி, நெளிய வைத்துவிடுவார்களோ?, என்ற அச்சம்வேண்டாம். இது உடல்ரீதியானது. மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் எல்லாம், எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்.

சர்க்கரை பாதிப்பை தடுக்கிறது.

நீரிழிவு நோய்

சர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.

புரதச்சத்து

உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது.

மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: