கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சையை கொண்டு இப்படி செய்தால் அதிஸ்டம் கிடைக்கும்!

0

கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சையை கொண்டு இப்படி செய்தால் அதிஸ்டம் கிடைக்கும்!

நாம் குலதெய்வ கோவிலிற்கு சென்று பூஜை செய்த பிறகு அங்கிருக்கும் பூசாரி நமக்கு ஒரு எலுமிச்சை பழத்தை கொடுப்பார். அதுபோல மற்ற கோவில்களிலும் சிலருக்கு அர்ச்சகர் எலுமிச்சை பழத்தை தருவார்கள். இது தவிர வீட்டில் செய்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சையை வைத்து பூஜை செய்வோம்.

ஆனால் இந்த எலுமிச்சை பழங்களை எல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பலருக்கு தெரிவதில்லை. இதுபோன்று கொடுக்கப்படும் எலுமிச்சை பழங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலில் நமக்கு கோவிலில் கிடைக்கும் எலுமிச்சையானது இறைவனின் பிரசாதமாக கருதப்படுகிறது. அதிலும் குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சைக்கு சக்தி சற்றே அதிகம்.

பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வீட்டில் உள்ள அனைவரும் அருந்த வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் விலகி ஆரோக்யம் மேம்படும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நம் வீட்டில் செய்யும் பூஜைகளில் வைக்கும் எலுமிச்சையும், அம்பிகையின் பிரசாதமாக எண்ணி அடுத்த நாள் காலையில் சாறு பிழிந்து அருந்துவது நல்லது.

கோயிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலுமிச்சம் பழத்தை வாங்கும் பொழுது அதை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. அதை சாறு பிழிந்து சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை! வீட்டில் நடக்கும் அதிசயத்தை தெரிஞ்சிக்கோங்க | Lemon Given Temple How To Use

ஆனால் உப்பு மட்டும் கலந்து குடிக்கக் கூடாது. கோவிலில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம் பழத்தை வைத்து கண்டிப்பாக திருஷ்டி சுத்தி போடக் கூடாது.

வீட்டில் அல்லது கடைகளில் வாங்கிய எலுமிச்சை பழத்தை வைத்து தான் திருஷ்டி சுற்றிட வேண்டும். இதைத்தவிர பிரசாதமாக வாங்கிய பழத்தை வைத்து திருஷ்டி சுத்தி போடக்கூடாது.

அதுமட்டுமின்றி கோவிலில் வாங்கிய எலுமிச்சம் பழத்தை நமது வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபடுவது வீட்டிற்கு கடவுளின் அருள் பார்வை மற்றும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும்.

அதிகமாக எலுமிச்சை மாலையாக பிரசாதம் பெற்றால் கடவுளின் அருகில் சுத்தமான பீங்கான் கிண்ணத்தில் நிறைய நீர் விட்டு அதில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கவும்.

இவை அழுகும் வரை வைத்து பிறகு அதை எடுத்து வீட்டில் கிணற்றில் அல்லது நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றல் எலுமிச்சையில் கிரகிக்கப்பட்டு வீட்டை சுற்றி நேர்மறையான ஆற்றல்கள் பெறலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 24.09.2022 Today Rasi Palan 24-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஅக்டோபர் 23 முதல் பல்வேறு வகையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்!