கோட்டாபயவின் ஆட்சியில் ஹிஸ்புல்லாவின் ஊரில் ஏற்பட்ட திடீர் மாறுதல்!

0
346

ஹிஸ்புல்லாவின் ஊரில் ஏற்பட்ட திடீர் மாறுதல், கோட்டாபய ஜனாதிபதியானதும்!

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த அமரவீர. சுதந்திரக்கட்சியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். கோட்டாபயவின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றார். அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், கோட்டாபயவிற்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்றார். முன்னைய காலங்களில் நாடு முழுவதும் ஒரேவிதமான சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. காத்தான்குடியில் ஹெல்மெட் அணிந்தபடி யாரும் பயணம் செய்வதில்லை. கோட்டாபய காத்தான்குடிக்கு செல்லவில்லை. ஆனால், அவர் ஜனாதிபதியானதும், காத்தான்குடி கடைகளில் ஹெல்மெட்கள் விற்று முடிந்து விட்டதாம்“ என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: