கொழுப்பின்றி கட்டுமஸ்தான உடலை பெற உதவும் வழிகளை தெரியுமா!

0
934

சமீப காலங்களில் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதற்கு உடலைப் ஆரோக்கியமானதாகவும், வலிமை மிகுந்ததாகவும் பேண வேண்டும் என்பது தான் காரணம்.

ஆனால் சில சமயங்களில் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் சேர்ந்து, குண்டாகி விடுகிறது. கொழுப்பின்றி கட்டுமஸ்தான உடலை பெற உதவும் வழிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

1 – கலோரியை அதிகப்படுத்தும் உணவுகள்:

உடல் ஆற்றலைப் பெற அதிகப்படியான கலோரிகள் தேவைப்படுகிறது. அதற்காக கண்ணில் காணும் அனைத்து உணவுப் பொருட்களையும் உட்கொள்வது தவறு. புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள், குறைந்த கிளைசெமிக் கார்ப்ஸ், டயட் உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

2 – கார்போஹைட்ரேட் சத்துப் பொருள்:

கார்போஹைட்ரேட் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளுதல் சுரப்பிகளின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால் அளவாக இருக்குமாறும் பார்த்துக் கொள்வது நல்லது. உருளை, ஓட்ஸ், அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றை உண்ணலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், பின்பும் கிளைகோஜன் மற்றும் இன்சுலின் சேர்ப்பு உணவுப் பொருட்கள் அவசியம்.

3 – டயட் கொழுப்பு உணவு:

ஆரோக்கியமான கொழுப்பு வகை என்றும் உடலுக்கு தீங்கல்ல. அவற்றில் 9 கலோரி கொழுப்பு, 4-5 கலோரிகள் கார்போஹைட்ரேட்கள் மற்றூம் புரதம் நிறைந்திருக்கும். எந்த அளவிற்கு கலோரியை பெற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு உடல் தசைகள் வளரும். எண்ணெய் பயன்படுத்திய உணவுப் பொருட்களை தவிர்த்தல் நலம்.

4 – அளவான உடற்பயிற்சி தேவை:

போதிய உடற்பயிற்சி உடல் கொழுப்பை குறைக்கும். அதுவே அதிகப்படியாக போனால், தசைகளை பாதித்துவிடும். கட்டுமஸ்தான் உடலைப் பெறுவது என்பது போதுமான கலோரிகள் உடன், சரியான உடற்பயிற்சி செய்து கிடைக்கப் பெற வேண்டும்.

5 – சரியான பளுதூக்குதல்:

தசைகளின் அளவை பெரிதுபடுத்த, சரியான எடையை தூக்கி பயிற்சி பெற வேண்டும். 50 கிலோ எடையுடனான உடல் அமைப்புடன், 100 கிலோ எடையை தூக்க முயற்சிப்பது ஆபத்தில் முடியும். முடிந்தவரை மட்டுமே பளு தூக்கி பயிற்சி பெற வேண்டும். அதுவும் படிப்படியான உயர்வது சிறப்பு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: