கொரோனா நோயாளியால் இலங்கையில் கிராமம் சீல் வைக்கப்பட்டது.

0
158

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளமையினால் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கடந்த 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது தந்தை மற்றும் சகோதரியும் இன்று காலை நோய் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த கிராமம் மொத்தமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: