கொரோனா நோயாளிகளுக்கு உள்ளாடையுடன் சிகிச்சை..! வைரலான புகைப்படம்!
கொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா நோயாளிகளிடமிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு டாக்டர்கள், நர்ஸ்கள் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிந்துதான் பணிபுரிவார்கள். இதை சரியாக பயன்படுத்த தவறினால் கொரோனா தொற்றிற்கு உள்ளாக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும்.
PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதனைக் கழற்ற முடியாத கஷ்டமும் உள்ளது. இந்த PPE -க்கள் கண்ணாடி போன்று இருக்கும். உள்ளே அணியும் உடைகள் வெளியே தெளிவாக தெரியும்.
ரஷியாவில் துலா என்ற நகரிலுள்ள வைத்தியசாலையில் கொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்துள்ளார்.
அந்த இளம் நர்ஸ், நர்ஸ்க்கான உடை அணிந்து அதன்மீது PPE-யை அணிந்தால் அசௌகரியமாக இருக்கும் என்றும், அதேவேளையில் வெப்பம் அதிகமாகி வியர்க்கும் எனக்கருதி உள்ளாடைகளை மட்டும் போட்டுக்கொண்டு அதன்மேல் PPE-யை அணிந்து பணிபுரிந்துள்ளார். நோயாளிகள் இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை.மேலும் இப்படம் எப்படியோ வெளியில் கசிந்து வைரலாகிவிட்டது.
நர்ஸ் அவர்களுக்காக கொடுக்கப்பட்ட ஆடைகளை கட்டாயம் அணிந்து வேலை செய்ய வேண்டும். இதை செய்யத் தவறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
By: Tamilpiththan