உறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வு என்ன சொல்கிறது? என்ன செய்ய வேண்டும்?விளக்கமான தகவல் இதோ!

0

கொரோனா வைரஸ் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உறவு கொள்வது பாதுகாப்பானதா?

உறவு கொள்ளக் கூடிய துணை உங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இருவரும் விலகி இருப்பது சிறந்தது.

புதிய நபர்களுடன் உறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா?

புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம். எந்த அறிகுறியும் இல்லாமல் இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரணமான‌ முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருக்ககூடும். குறிப்பிட்ட நபருக்கு தொற்று இருந்தால் ஆபத்து.

அப்படி ஏதும் கொரோனா தொற்று அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை எடுத்துக் கூறுங்கள். உங்களை தனிமைப்படுத்துங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடையாளம் தெரியாது மாறிவிட்ட தளபதி மகள் திவ்வியாவின் சூப்பர் புகைப்படம் வைரலாகி உள்ளது. அழகில் அம்மாவை மிஞ்சிவிட்டாரே!
Next articleகுறுகியகால வேலையிழப்புக்கு தொழிலாளர்களுக்கு 100 வீத சம்பளம்!