இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது.
இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.
இதய ரேகை கைரேகை ஜோதிடர்கள் கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கூறுகின்றனர். எனவே உங்களது வலது மற்றும் இடது கைகளில் உள்ள இதய ரேகையை சோதித்துப் பாருங்கள்.
இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்… இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்..
வாழ்க்கைத் துணை இம்மாதிரியான இதய ரேகைகளைக் கொண்டவர்களுக்கு துணையாக வருபவர்கள், அவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்திருப்பார்கள். இந்த மாதிரியான இதய ரேகை கொண்டவர்களுக்கு அமையும் துணை, அவர்களை நன்கு புரிந்தவர்களாகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பர்.
இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், நல்ல காதலராக இருப்பர். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
மற்றவர்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், தனக்கு தோன்றுவதை மட்டும் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், தன் இதயம் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். மேலும் இவர்கள் சொந்த வரையறையில் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களது கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.
வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள் மற்றும் ஆக்கிரோஷ குணம் கொண்டவர்களாக இருப்பர். சவால்களை விரும்புவார்கள்.
அதுமட்டுமின்றி இந்த வகையினர் தனக்கு ஒரு துணை வந்தால் தான் தன் வாழ்க்கை முழுமை அடையும் என்றெல்லாம் உணரமாட்டார்கள். மேலும் இவ்வகையினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள். காதலுக்காக யார் பின்னாலும் செல்லமாட்டார்கள். ஆனால் இத்தகையவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக இருப்பார்கள்.