குழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில் துடிதுடித்து இறந்த தாய்!

0
1089

ரஷ்யாவில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயின் கருப்பையை தவறுதலாக மருத்துவர் அகற்றியதால் அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 22 வயதான அலிசா டெபிகினா என்கிற நிறைமாத கர்ப்பிணி பெண், கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக நிஸ்னெசெர்கின்ஸ்காயா நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அன்யா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை பார்த்து அலிஷா சிரித்த சிறிது நேரத்திலேயே, நஞ்சுக்கொடியை அகற்றுவதற்கு பதிலாக மருத்துவர் கருப்பையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார்.

இதில் வலிதாங்க முடியாமல் அலறியபடியே அலிஷா துடிதுடித்து, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துள்ளார். அந்த சத்தத்தை மருத்துவமனையில் இருந்த பலரும் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அலிசாவிற்கு சிகிச்சை மேற்கொண்ட எலெனா பரன்னிகோவா என்கிற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே! தெறிக்க விடும் ஈழத்து இளைஞர்! குவியும் லைக்ஸ் !
Next articleலலிதா ஜீவல்லரி கொள்ளையனால் அடுத்தடுத்து பீதி.. அலறியடித்து பரிசோதனைக்கு ஓடும் நடிகைகள்!