ஜாதக ரீதியாக குழந்தைபேறு எப்படி அமையும் குழந்தையின் குண நலன் எப்படி இருக்கும்!

0
4585

ஜாதக ரீதியாக குழந்தைபேறு :

குழந்தைபேறு ஏற்படுவதற்கு தேவையான சில முக்கிய கிரக சேர்க்கைகள் சொல்லப்பட்டுள்ளன.

அவை வருமாறு : ஐந்தாம் விட்டுக்கு அதிபதி லக்னத்தில் இருந்து நல்ல கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும்.

இரண்டாவது வீட்டில் இருந்தால் நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.

மூன்றாவது வீட்டில் இருந்தால் பல நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

நான்காவது வீட்டில் இருந்தால் ஒரு சில குழந்தைகள் மட்டுமே இருப்பதற்கு வாய்ப்புண்டு.

ஐந்தாவது வீட்டில் இருந்தால் நிறைய குழந்தைகள் இருக்கும்.

ஆறாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தையே தந்தைக்கு எதிரியாகிவிடக்கூடும்.

ஏழாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகள் செல்வாக்குடனும், புகழுடனும் இருப்பதோடு செல்வதந்ராகவும் விளங்குவார்கள்.

எட்டாவது வீட்டில் இருந்து வேறு கிரகங்கள் சாதகமாக அமையாவிட்டால் குழந்தைப்பேறு இருக்காது. அப்படியே குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் துன்பம் ஏற்படும்.

ஒன்பதாவது வீட்டில் இருந்தால் பிறந்த குழந்தைகளின் ஒன்று புகழ்பெற்ற பேச்சாளராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருக்கும்.

பத்தாவது வீட்டில் இருந்தால் அது ராஜயோகம், குழந்தையால் குடும்ப புகழ் ஓங்கும்.

பதினோராவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகளின் மூலம் செய்கின்ற தொழிலில் அபிவிருத்தி ஏற்பட்டு செல்வம் பெருகும்.

பன்னிரண்டாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகள் ஞானம் பெற்றவர்களாக விளங்குவார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம். செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார். போர் தளபதி செவ்வாய் கோபம், வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய். இவருக்கு உரிய தெய்வம் முருகன். ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் பயம் அதிகரிக்கும். தனக்கு எப்போது பிரச்சினை வருமோ என பயம் கொள்ள வைக்கும் கீழான ஆட்களால் தொந்தரவுகளை சந்திக்க நேரும். ஆனாலும் பலரால் விரும்பபடுவார்கள். இவங்ககிட்ட எதிர்ப்புணர்வு அதிகம் இல்லையே அதனால். ஆனால் கோபம் சட்டென வரும். அதைவிட பயம் அதிகம் இருக்கும். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பு தருகிறது.

பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் ,கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது. செவ்வாய் அதிக வீரியமுள்ள கிரகம் என்பதால் கா.ம உ.ண.ர்.வை தூண்டுவதில் அதாவது எண்ணத்தை செயல்படுத்துவதில் வல்லவனாக திகழ்கிறது களத்திரகாரகன் சுக்கிரன். இவர் ஆணின் விந்தணுக்களுக்கும்,பெண்களின் கருமுட்டைகளுக்கும் காரகத்துவம் ஆகிறார். சுக்கிரன் கெட்டால் இவை கெட்டுப்போகும். விந்தணு குறைபாடு,கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் உண்டாகும். சுக்கிரன் பலம் அழகிய தோற்றத்தை உண்டாக்குவார்.

சுக்கிரன் பலம் பெற்றால் சினிமா நடிகை குஷ்பூ,ஹன்சிகா போல,,கார்த்தி ,மாதவன் போல அழகிய தோற்றம் பெறுவார்கள். பெண்கள் சம்பந்தமான பா.லி.ய.ல் நோய்களையும்,சிறுநீரக கோளாறுகளையும் சுக்கிரனே கொடுக்கிறார். சுக்கிரன்,செவ்வாய் இணைந்தால் அதிக உணர்வுகளை தூண்டிவிடுகிறார். இதனால் எதிர்பாலினரால் பல பிரச்சினைகளை சந்திக்க வைக்கிறார். செவ்வாய் 7ல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும். பார்க்கும் கிரகங்களை பொறுத்து பலன் மாறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தைக்கு ஒரு வயதிற்கு முன்பு ஜாதகம் கணிக்கலாமா?
Next articleஇன்றைய ராசிப்பலன் – 24.01.2019 வியாழக்கிழமை!