கும்ப ராசிக்கு செல்லும் சனியால் ஏற்படப்போகும் சசயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களிற்கு 2023 அதிக நன்மையும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.

0

கும்ப ராசிக்கு செல்லும் சனியால் ஏற்படப்போகும் சசயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களிற்கு 2023 அதிக நன்மையும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.

ஜனவரி 17 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் சச ராஜயோகம் உருவாகவுள்ளது. சனி பகவானால் உருவாகக்கூடிய சச யோகம் என்பது செல்வம் தரும் யோகமாகும். இந்த ராஜயோகம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகிறது.

கும்ப ராசிக்கு செல்லும் சனியால்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகுவதால் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு புதிய தொழில் தொடங்க சிறந்த நேரம். வருமானத்தில் நல்ல மாற்றமும் உயர்வும் இருக்கும். புதிய சொத்துக்கள் வாகனங்கள் வாங்கும் யோசனை நிறைவேறும். சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல காலம்.

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சச ராஜயோகத்தை உருவாக்குவதால் இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிப்பதோடு நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்களின் எதிரிகளை இக்காலத்தில் எளிதில் வெற்றிபெற்று நீதிமன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எல்லா வேலைகளும் வெற்றிகரமாக முடியும். மொத்தத்தில் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செல்லும் சனியால் உருவாகும் சச ராஜயோகம், கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துளைப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்க சிறந்த காலம். இதுவரை செய்த கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மூதாதையர்களின் சொத்துக்களால் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 22.11.2022 Today Rasi Palan 22-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசிபலன் 23.11.2022 Today Rasi Palan 23-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!