குப்பைவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட லட்சாதிபதி முதியவரின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்!

0
746

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இறுதிச் சடங்குக்காக குப்பைவண்டியில் முதியவர் ஒருவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான ராஜாராம். கூலித் தொழிலாளியான இவர் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டதால் அந்தப் பகுதியிலேயே பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார்.

கடந்த மாதம் இறந்த அவரது உடலைக் கைப்பற்றிய சோளிங்கர் காவல்துறையினர், ராஜாராமின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் இறுதிச் சடங்கு செய்ய தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால், ராஜாராமின் உடலை பேரூராட்சி நிர்வாகத்திடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் வைத்து ராஜாராமின் உடலை சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த புகைப்படம் வைரலான நிலையில், ராஜாராமின் குடும்ப பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜாராமின் தந்தை வைத்தியராக இருந்துள்ளார். பெற்றோர் இறந்த பின்னர் வீட்டை விற்று, பணத்தை வங்கியில் சேமித்துள்ளார்.

அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
பல லட்சம் பணம் இருந்தும் இறந்த பின்னர் குப்பை வண்டியில் சடலத்தை அனாதை பிணமாக கொண்டு செல்லப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: