குடிக்கும் சூப்பில் எலியின் குடல்! அதிர்ச்சியடைந்த பெண்!

0
313

அமெரிக்காவில் பெண் வாங்கிய சூப்பில் எலியின் குடல் இருந்துள்ளதால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் Oregon பகுதியைச் சேர்ந்த பெண்Maesel Dorn /(72). இவர் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் திகதி Pacific Foods நிறுவனத்தின் Organic Roasted Red Pepper and Tomato சூப் வாங்கியுள்ளார்.

அதன் பின் வீட்டிற்கு சென்ற அவர் சூப்பை குடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது.

இதனால் சூப்பை குடிக்காமல் இருந்துள்ள அவர், இரண்டு தினங்களுக்கு கழித்து மீண்டும் சூப்பை எடுத்து குடித்துள்ளார்.

அப்போது உள்ளே ஏதோ கருப்பாக இருந்துள்ளது. சந்தேகமடைந்த அவர் உடனடியாக பார்த்த போது அது எலியின் குடலாக இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

அவர் அதை அங்கிருக்கும் Fred meyer store-ல் வாங்கியுள்ளார். இது குறித்து Pacific Foods நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அவர்கள் சரிவர பதிலளிக்காத காரணத்தினால் அந்த நிறுவனத்தின் மீது 400,00 டொலர் இழப்பீடு கேட்டு Multnomah County-ல் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: