குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்குமாறு பிரபல இயக்குனர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை!

0
149

குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்குமாறு பிரபல இயக்குனர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை!

கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை மூடி உள்ளனர். இதனால் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் குடிகாரர்கள் அல்லாடுகிறார்கள். போதைக்காக சானிடைசர்கள் மற்றும் திரவங்களை குடிக்கும் சம்பவங்களும், இதனால் உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனையும் விறுவிறுப்பாக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குடிகாரர்கள் பிரச்சினையை மனதில் கொண்டு வீட்டுக்கு வீடு அளவுடன் மது விற்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், “மது கிடைக்காமல் தலைமுடியை பிய்த்து, பைத்தியமாகி மனைவிமார்களை அடித்து துன்புறுத்தும் குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஆந்திர, தெலுங்கானா முதல்-மந்திரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இவருடையை கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அடுத்த வேளை உணவு கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் மது தேவையா? என்றும் கண்டித்திருக்கின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: