கிளிநொச்சி இளம் குடும்ப பெண் படுகொலை! கணவன் பொலிஸாரால் அதிரடியாக கைது!

0
742

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான பாஸ்கரன் நிரோசா என்ற குறித்த பெண் நேற்று நண்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இப்பெண், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீண்ட காலமாக போராடி வந்ததாக அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னணியில், இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: