Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal கிரீன்கார்ட் விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு டிரம்ப் அறிவிப்பு!

கிரீன்கார்ட் விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு டிரம்ப் அறிவிப்பு!

0
1674

திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்ட்’ வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளமை கிரீன்கார்ட் விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்ட் அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

தங்களுக்கு கிரீன் கார்ட் மூலம் குடியுரிமை கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப், ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அப்போது சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் ஆயிரக்கணக்கானவர்கள் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்களால் திறமையான வெளிநாட்டினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிரீன் கார்ட் பெற விண்ணப்பித்து அதற்காக லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்கள் திறமைசாலிகள் எந்த பணியையும் மிக சரியாக செய்கின்றனர். அவர்கள் நமக்கு தேவை.

ஏனெனில் நமது நாட்டில் (அமெரிக்காவில்) பல நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரிய ஊழியர்கள் தேவை. திறமையின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு கிரீன் கார்ட் வழங்கப்படும் என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன் கார்ட் விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டி னருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

Previous articleசீன பஸ் விபத்தில் 15 பேரின் உயிரிழப்புக்கு காரண வீடியோ வெளியானது!
Next articleகர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்!