கிராம மக்கள் செய்த காரியத்தை பாருங்க! ரயிலை மறித்து சீறி பாய்ந்த நாகப்பாம்பு!

0
404

மத்திய பிரதேச மாநிலத்தில் நாகப்பாம்பு ஒன்று ரயில் பாதையில் குறுக்கிட்டதால் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் – ஜபல்பூர் ரயில் பாதையில் நாகப்பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.

இதனால், அந்த சமயத்தில் வந்த ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. இ

இந்நிலையில், ரயில் நிறுத்தப்பட்ட உடன் அங்கு கூடிய பொதுமக்கள் பாம்புக்கு பூஜை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால், அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக கானப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அருகிலிருந்து கேரி கிராமத்து மக்கள் அப்பாம்பை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் பாம்பு அவர்கள் மீது சீறிப் பாய்ந்ததால் அவர்களால் பாம்பை விரட்ட முடியவில்லை.

பின்பு, வனத்துறையை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டும், அவர்கள் வர தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாம்பு கிட்டத்தட்ட 5 அடி தூரம் தள்ளிச் சென்ற பிறகே போலீஸார் அங்கு வந்து கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், பூஜை நடக்கும் போது கர்பூரம் மற்றும் ஆரத்தி காட்டி தேங்காயும் உடைக்கப்படிட சம்பவமும் தான் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: