காரில் இருந்த படி ரோட்டில் பணங்களை வீசிச் சென்ற பணக்கார பிள்ளைகள்!

0
301

காரில் இருந்த படி ரோட்டில் பணங்களை வீசிச் சென்ற பணக்கார பிள்ளைகள்: அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரஷ்யாவில் காரின் உள்ளே இருந்த இளம் வயது பெண் ஒருவர் காரில் இருந்தபடி பணங்களை நடு ரோட்டில் வீசிக் கொண்டே சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Russian Rich Kids என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் விலைமதிப்பு மிக்க காரில் இருக்கும் நான்கு பேரில் ஒரு இளம் வயது பெண் தன்னுடைய கையில் இருக்கும் ரஷ்யாவின் ரூபல் பணங்களை நடு ரோட்டில் வீசிய படி செல்கிறார்.

காரின் உள்ளே gangster பாடல் பாடியபடி இருந்தது.

அப்போது அந்த காரில் இருக்கும் நபர்கள் நீங்கள் எல்லாம் சின்ன மக்கள் எடுத்துக் கோங்க என்ற படி கூறிய படி இருந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலானதால் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் அந்த காரை ஓட்டிய நபர் வயது குறைவான நபர் போன்று தெரிந்துள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இந்த சம்பவம் ரஷ்யாவின் St Petersburg தெருவில் இருக்கும் சாலையில் நடந்ததாகவும், அப்போது காரின் உள்ளே நான்கு பேர் இருந்ததாகவும், அதில் இரண்டு பேர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும் 5,000 ரூபல்(இலங்கை மதிப்பு 12,687 ரூபாய்) காரிலிருந்து வீசப்பட்டதாகவும், சின்ன மக்களே இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொலர்கள் இருக்கிறது என்று கூறியபடியே அவர் வீசியுள்ளார்.

இந்த வீடியோவை எடுக்கும் நபர் சிரித்துக் கொண்டே எடுக்கிறார். குறித்த வீடியோ மில்லியன் கணக்கை தாண்டிச் சென்றுவிட்டதாகவும், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: